Psalm 119:169-175 in Tamil in Tamil
சங்கீதம் 119
169 கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். Let my cry come near before thee, O LORD: give me understanding according to thy word.
170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். Let my supplication come before thee: deliver me according to thy word.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். My lips shall utter praise, when thou hast taught me thy statutes.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும். My tongue shall speak of thy word: for all thy commandments are righteousness.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. Let thine hand help me; for I have chosen thy precepts.
174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. I have longed for thy salvation, O LORD; and thy law is my delight.
175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.
Read Full Chapter : சங்கீதம் 119