1 ⁽நீதிமான்களே,␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது␢ பொருத்தமானதே.⁾

2 ⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾

3 ⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾

4 ⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾

5 ⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾

6 ⁽ஆண்டவரது வாக்கினால்␢ வானங்கள் உண்டாயின;␢ அவரது சொல்லின் ஆற்றலால்␢ வான்கோள்கள் எல்லாம் உருவாயின.⁾

7 ⁽அவர் கடல்நீரைக்␢ குவியல்போல் சேர்த்து வைத்தார்;␢ அந்நீரை ஆழ் நிலவறைகளில்␢ சேமித்து வைத்தார்.⁾

8 ⁽அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!␢ உலகில் வாழ்வோர் அனைவைரும்␢ அவருக்கு அஞ்சிநடுங்குவராக!⁾

9 ⁽அவர் சொல்லி உலகம் உண்டானது;␢ அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.⁾

10 ⁽வேற்றினத்தாரின் திட்டங்களை␢ ஆண்டவர் முறியடிக்கின்றார்;␢ மக்களினத்தாரின் எண்ணங்களைக்␢ குலைத்து விடுகின்றார்.⁾

11 ⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾

12 ⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾

13 ⁽வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;␢ மானிடர் அனைவரையும் காண்கின்றார்.⁾

14 ⁽தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து␢ உலகெங்கும் வாழ்வோரைக் § கூர்ந்து நோக்குகின்றார்.⁾

15 ⁽அவர்களின் உள்ளங்களை␢ உருவாக்குகின்றவர் அவரே!␢ அவர்களின் செயல்கள் அனைத்தையும்␢ உற்று நோக்குபவரும் அவரே!⁾

16 ⁽தன் படைப் பெருக்கத்தால்␢ வெற்றிபெரும் அரசருமில்லை;␢ தன் வலிமையின் மிகுதியால்␢ உயிர் தப்பிய வீரருமில்லை.⁾

17 ⁽வெற்றி பெறப்␢ போர்க்குதிரையை நம்புவது வீண்;␢ மிகுந்த வலுவுள்ளதாயினும்␢ அது விடுவிக்காது.⁾

18 ⁽தமக்கு அஞ்சி நடப்போரையும்␢ தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்␢ ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.⁾

19 ⁽அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; § அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.⁾

20 ⁽நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;␢ அவரே நமக்குத் துணையும் § கேடயமும் ஆவார்.⁾

21 ⁽நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;␢ ஏனெனில், அவரது திருப்பெயரில்␢ நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.⁾

22 ⁽உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,␢ உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!⁾

Psalm 33 ERV IRV TRV