1 ⁽ஆண்டவரே, எனக்கெதிராய்␢ வழக்காடுவோருடன் வழக்காடும்;␢ என்மீது போர் தொடுப்போரோடு␢ போர் புரியும்.⁾

2 ⁽கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்;␢ எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.⁾

3 ⁽என்னைத் துரத்திவரும் எதிரிகளைத்␢ தடுத்து நிறுத்தும்;␢ ஈட்டியையும் வேலையும் கையிலெடும்;␢ ‛நானே உன் மீட்பர்’ என்று␢ என் உள்ளத்திற்குச் சொல்லும்.⁾

4 ⁽என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்;␢ மானக்கேடுற்று இழிவடையட்டும்;␢ எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர்,␢ புறமுதுகிட்டு ஓடட்டும்.⁾

5 ⁽ஆண்டவரின் தூதர் அவர்களை␢ விரட்டியடிக்க,␢ காற்றில் பறக்கும் பதர்போல␢ அவர்கள் சிதறட்டும்.⁾

6 ⁽ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட,␢ அவர்கள் வழி இருளும்␢ சறுக்கலும் ஆகட்டும்.⁾

7 ⁽ஏனெனில், காரணமின்றி␢ எனக்குக் கண்ணி வைத்தனர்;␢ காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.⁾

8 ⁽அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்;␢ அவர்களுக்கு வைத்த கண்ணியில்␢ அவர்களே சிக்கக்கொள்ளட்டும்;␢ அவர்கள் தோண்டிய குழியில் § அவர்களே விழட்டும்.⁾

9 ⁽என் உள்ளம்␢ ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்;␢ அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.⁾

10 ⁽‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?␢ எளியோரை வலியோரின் கையினின்றும்␢ எளியோரையும் வறியோரையும்␢ கொள்ளையடிப்போர் கையினின்றும்␢ விடுவிப்பவர் நீரே” என்று␢ என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.⁾

11 ⁽பொய்ச்சான்று சொல்வோர்␢ எனக்கெதிராய் எழுகின்றனர்;␢ எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி␢ என்னிடம் வினவுகின்றனர்.⁾

12 ⁽நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்;␢ அவர்களோ, அதற்குப் பதிலாக␢ எனக்குத் தீங்கிழைத்தனர்.␢ என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.⁾

13 ⁽நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது,␢ சாக்கு உடுத்திக் கொண்டேன்;␢ நோன்பிருந்து என்னை␢ வருத்திக் கொண்டேன்;␢ முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.⁾

14 ⁽நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும்␢ அவர்களுக்காய் மன்றாடினேன்;␢ தாய்க்காகத் துக்கம்␢ கொண்டாடுவோரைப்போல␢ வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.⁾

15 ⁽நான் தடுக்கி விழுந்தபோது␢ அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்;␢ எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்;␢ யாதொன்றும் அறியாத என்னைச்␢ சின்னாபின்னமாக்கி␢ ஓயாது பழித்துரைத்தனர்.⁾

16 ⁽இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து␢ அவர்கள் என்னை இகழ்ந்தனர்;␢ எள்ளி நகையாடினர்;␢ என்னைப் பார்த்துப்␢ பற்களை நறநறவென்று கடித்தனர்.⁾

17 ⁽என் தலைவரே, இன்னும் எத்தனை நாள்␢ இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?;␢ என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும்␢ என் ஆருயிரைச்␢ சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.⁾

18 ⁽மாபெரும் சபையில்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ திரளான மக்களிடையே␢ உம்மைப் புகழ்வேன்.⁾

19 ⁽வஞ்சகரான என் எதிரிகள்␢ என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்;␢ காரணமின்றி என்னை வெறுப்போர்␢ கண்சாடை காட்டி இகழவிடாதீர்.⁾

20 ⁽ஏனெனில், அவர்களது பேச்சு␢ சமாதானத்தைப் பற்றியதன்று;␢ நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக␢ அவர்கள் வஞ்சகமாய்ச் § சூழ்ச்சி செய்கின்றனர்.⁾

21 ⁽எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து,␢ ‛ஆ! ஆ! நாங்களே எங்கள்␢ கண்ணால் கண்டோம்’ என்கின்றனர்.⁾

22 ⁽ஆண்டவரே, நீர் இதைக் கண்டும்␢ மௌனமாய் இராதீர்;␢ என் தலைவரே, என்னைவிட்டுத்␢ தொலையில் போய்விடாதீர்.⁾

23 ⁽என் கடவுளே, கிளர்ந்தெழும்!␢ என் தலைவரே, விழித்தெழுந்து␢ என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.⁾

24 ⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமது நீதிக்கேற்ப␢ என் நேர்மையை நிலைநாட்டும்!␢ அவர்கள் என்னைப் பார்த்துக்␢ களிக்க இடமளியாதேயும்!⁾

25 ⁽அவர்கள் தங்கள் உள்ளத்தில்␢ ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச்␢ சொல்லாதபடி பாரும்!␢ ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப்␢ பேசிக்கொள்ளாதபடி பாரும்!⁾

26 ⁽எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து␢ மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும்␢ கலக்கமுறட்டும்! என்னைவிடத்␢ தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு␢ வெட்கமும் மானக்கேடும்␢ மேலாடை ஆகட்டும்!⁾

27 ⁽என் நேர்மை நிலைநாட்டப்படுவதை␢ விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்;␢ ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!␢ அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக்␢ காண விரும்புவோர்’ என்று␢ எப்பொழுதும் சொல்லட்டும்.⁾

28 ⁽அப்பொழுது, என் நா␢ உம் நீதியை எடுத்துரைத்து,␢ நாள் முழுதும் உம் புகழ் பாடும்.⁾

Psalm 35 ERV IRV TRV