1 ⁽‛கடவுள் இல்லை’ என␢ அறிவிலிகள் தம் உள்ளத்தில்␢ சொல்லிக் கொள்கின்றனர்;␢ அவர்களுள் சிலர் கெட்டு␢ அருவருப்பான செயல்களில் § ஈடுபடுகின்றனர்;␢ நல்லது செய்வார் யாரும் இல்லை.⁾

2 ⁽கடவுள் விண்ணகத்தினின்று␢ மானிடரை உற்றுநோக்குகின்றார்;␢ மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர்␢ எவராவது உண்டோ என்று␢ பார்க்கின்றார்.⁾

3 ⁽எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;␢ ஒருமிக்கக் கெட்டு போயினர்;␢ நல்லது செய்வார் யாரும் இல்லை;␢ ஒருவர் கூட இல்லை.⁾

4 ⁽‛தீங்கிழைக்கும் யாவரும்␢ அறிவை இழந்துவிட்டார்களோ?␢ உணவை விழுங்குவதுபோல்␢ என் மக்களை␢ விழுங்கப் பார்க்கின்றார்களே!’ § இவர்கள் கடவுளை நோக்கி␢ மன்றாடுவதுமில்லை;⁾

5 ⁽எனவே, அவர்கள்␢ இதுவரை கண்டிராத முறையில்␢ பேரச்சத்தால் நடுநடுங்குவர்;␢ இறைமக்களை ஒடுக்கியோரின்␢ எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்;␢ கடவுள் அவர்களைக் கைவிட்டதால்␢ அவர்கள் மானக்கேடு அடைவர்.⁾

6 ⁽சீயோனிலிருந்து␢ இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக!␢ கடவுள் தம் மக்களுக்கு மீண்டும்␢ வளமான வாழ்வை அருளும்போது,␢ யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!␢ இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!⁾

Psalm 53 ERV IRV TRV