Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 2:5 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 2 Song of Solomon 2:5

Song Of Solomon 2:5
திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள். கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.

Thiru Viviliam
⁽திராட்சை அடைகள் கொடுத்து␢ என்னை வலிமைப்படுத்துங்கள்;␢ கிச்சிலிப்பழங்களால்␢ எனக்கு ஊக்கமூட்டுங்கள்.␢ காதல் நோயால்␢ தான் மிகவும் நலிந்து போனேன்.⁾

Song of Solomon 2:4Song of Solomon 2Song of Solomon 2:6

King James Version (KJV)
Stay me with flagons, comfort me with apples: for I am sick of love.

American Standard Version (ASV)
Stay ye me with raisins, refresh me with apples; For I am sick from love.

Bible in Basic English (BBE)
Make me strong with wine-cakes, let me be comforted with apples; I am overcome with love.

Darby English Bible (DBY)
Sustain ye me with raisin-cakes, Refresh me with apples; For I am sick of love.

World English Bible (WEB)
Strengthen me with raisins, Refresh me with apples; For I am faint with love.

Young’s Literal Translation (YLT)
Sustain me with grape-cakes, Support me with citrons, for I `am’ sick with love.

உன்னதப்பாட்டு Song of Solomon 2:5
திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
Stay me with flagons, comfort me with apples: for I am sick of love.

סַמְּכ֙וּנִי֙sammĕkûniysa-meh-HOO-NEE
בָּֽאֲשִׁישׁ֔וֹתbāʾăšîšôtba-uh-shee-SHOTE
רַפְּד֖וּנִיrappĕdûnîra-peh-DOO-nee
בַּתַּפּוּחִ֑יםbattappûḥîmba-ta-poo-HEEM
כִּיkee
חוֹלַ֥תḥôlathoh-LAHT
אַהֲבָ֖הʾahăbâah-huh-VA
אָֽנִי׃ʾānîAH-nee

Cross Reference

உன்னதப்பாட்டு 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.

ஓசியா 3:1
பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் என்று சொன்னார்.

2 சாமுவேல் 6:19
இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.

பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

லுூக்கா 24:32
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

உன்னதப்பாட்டு 7:8
நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.

சங்கீதம் 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.

சங்கீதம் 63:8
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

சங்கீதம் 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

சங்கீதம் 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

1 நாளாகமம் 16:3
புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

2 சாமுவேல் 13:1
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.


Tags திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள் கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்
Song of Solomon 2:5 in Tamil Concordance Song of Solomon 2:5 in Tamil Interlinear Song of Solomon 2:5 in Tamil Image