Strong's Greek Concordance — Tamil
Strong's Greek #2411
| Base Word | |
| ἱερόν | |
| Short Definition | a sacred place, i.e., the entire precincts (whereas G3485 denotes the central sanctuary itself) of the Temple (at Jerusalem or elsewhere) |
| Long Definition |
a sacred place, temple used of the temple of Artemis at Ephesus, used of the temple at Jerusalem |
| Derivation | neuter of G2413 |
| Syllable | hieron |
| Diction | hee-eh-RONE |
| Usage | temple |
Bible Verses (69 occurrences)
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியிலே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்ட
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.