Strong's Hebrew Concordance — Tamil

Strong's Hebrew #8141

Base Word
שָׁנֶה
Short Definitiona year (as a revolution of time)
Long Definition

year

as division of time, as measure of time, as indication of age, a lifetime (of years of life)

Derivation(in plural or (feminine) שָׁנָה; from H8138
Syllablešāne
Dictionshaw-NEH
Usage+ whole age, × long, + old, year, × yearly
Part of speechn-f

Bible Verses (646 occurrences)

Genesis 1:14

பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும்

Genesis 5:3

ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

Genesis 5:4

ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:5

ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

Genesis 5:6

சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

Genesis 5:7

சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:8

சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

Genesis 5:9

ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

Genesis 5:10

ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 5:11

ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.