Lyrics PPT

Deva Evveettil Intrae Meavi PPT - தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து

பல்லவி

Slide 1

தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே!

Slide 2

சரணங்கள்

Slide 3

1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா!

Slide 4

மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா

Slide 5

2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.-என்றும் அத்தனோ டுற வாக,-ஜெப துந்துமிகள் முழங்க,-ஐக்யம் பந்தமுடன் இலங்க,

Slide 6

தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச் சொந்தமுடன் ஈவாயே,-இவர் சந்ததம் வாழ நீயே. – தேவா

Slide 7

3. இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,-பரன் இஷ்டப்படி நடந்தே, அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,-இவர் அனுதினமும் மகிழ்ந்தே,-உயர் அம்பர வீட்டில் சேர்ந்து,-மிகு கெம்பீரமாக வாழ்ந்து,

Slide 8

புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில் இங்கிதமாய்க் கொண்டாட,-நிதம் மங்களக் கவி பாட. – தேவா

Deva Evveettil Intrae Meavi - தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து PowerPoint

Deva Evveettil Intrae Meavi - தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Lyrics

Deva Evveettil Intrae Meavi PPT

Download Deva Evveettil Intrae Meavi - தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Tamil PPT