வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
1 Chronicles 26:2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
1 Chronicles 26:3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
1 Chronicles 26:4ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
1 Chronicles 26:5யோசபாத், யோவாக், சாக்கார், நெனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
1 Chronicles 26:6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
1 Chronicles 26:7செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
1 Chronicles 26:8ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
1 Chronicles 26:9மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
1 Chronicles 26:10மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
1 Chronicles 26:11இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
1 Chronicles 26:12காவல்காரரான தலைவரின் கீழ்த் தங்கள் சகோதரருக்கு ஒத்த முறையாய், கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
1 Chronicles 26:13தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
1 Chronicles 26:14கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
1 Chronicles 26:15ஓபேத்ஏதேமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
1 Chronicles 26:16சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
1 Chronicles 26:17கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்.
1 Chronicles 26:18வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியிலே இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
1 Chronicles 26:19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.