கர்த்தர் மோசேயை நோக்கி:
Numbers 34:2நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,
Numbers 34:3உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.
Numbers 34:4உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,
Numbers 34:5அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
Numbers 34:6மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
Numbers 34:7உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
Numbers 34:8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாகவைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
Numbers 34:9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
Numbers 34:10உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து,
Numbers 34:11சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய்,
Numbers 34:12அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.
Numbers 34:13அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.
Numbers 34:14ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
Numbers 34:15இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.
Numbers 34:16மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி:
Numbers 34:17உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.
Numbers 34:18அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Numbers 34:19அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
Numbers 34:20சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,
Numbers 34:21பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,
Numbers 34:22தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Numbers 34:23யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
Numbers 34:24எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,
Numbers 34:25செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,
Numbers 34:26இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
Numbers 34:27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,
Numbers 34:28நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.
Numbers 34:29கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.