1அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.At that time Abijah the son of Jeroboam fell sick.
2அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and get thee to Shiloh: behold, there is Ahijah the prophet, which told me that I should be king over this people.
3நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.And take with thee ten loaves, and cracknels, and a cruse of honey, and go to him: he shall tell thee what shall become of the child.
4அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.And Jeroboam's wife did so, and arose, and went to Shiloh, and came to the house of Ahijah. But Ahijah could not see; for his eyes were set by reason of his age.
5கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.And the LORD said unto Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee for her son; for he is sick: thus and thus shalt thou say unto her: for it shall be, when she cometh in, that she shall feign herself to be another woman.
6ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.And it was so, when Ahijah heard the sound of her feet, as she came in at the door, that he said, Come in, thou wife of Jeroboam; why feignest thou thyself to be another? for I am sent to thee with heavy tidings.
7நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.Go, tell Jeroboam, Thus saith the LORD God of Israel, Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,
8நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்,And rent the kingdom away from the house of David, and gave it thee: and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in mine eyes;
9உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.But hast done evil above all that were before thee: for thou hast gone and made thee other gods, and molten images, to provoke me to anger, and hast cast me behind thy back:
10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.Therefore, behold, I will bring evil upon the house of Jeroboam, and will cut off from Jeroboam him that pisseth against the wall, and him that is shut up and left in Israel, and will take away the remnant of the house of Jeroboam, as a man taketh away dung, till it be all gone.
11யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.Him that dieth of Jeroboam in the city shall the dogs eat; and him that dieth in the field shall the fowls of the air eat: for the LORD hath spoken it.
12ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.Arise thou therefore, get thee to thine own house: and when thy feet enter into the city, the child shall die.
13அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலில் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமில் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.And all Israel shall mourn for him, and bury him: for he only of Jeroboam shall come to the grave, because in him there is found some good thing toward the LORD God of Israel in the house of Jeroboam.
14ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.Moreover the LORD shall raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.
15தண்ணீரிலே நாணல் அசைகிறது போல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,For the LORD shall smite Israel, as a reed is shaken in the water, and he shall root up Israel out of this good land, which he gave to their fathers, and shall scatter them beyond the river, because they have made their groves, provoking the LORD to anger.
16யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.And he shall give Israel up because of the sins of Jeroboam, who did sin, and who made Israel to sin.
17அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.And Jeroboam's wife arose, and departed, and came to Tirzah: and when she came to the threshold of the door, the child died;
18கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.And they buried him; and all Israel mourned for him, according to the word of the LORD, which he spake by the hand of his servant Ahijah the prophet.
19யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.And the rest of the acts of Jeroboam, how he warred, and how he reigned, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
20யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
21சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother's name was Naamah an Ammonitess.
22யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.And Judah did evil in the sight of the LORD, and they provoked him to jealousy with their sins which they had committed, above all that their fathers had done.
23அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.For they also built them high places, and images, and groves, on every high hill, and under every green tree.
24தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.And there were also sodomites in the land: and they did according to all the abominations of the nations which the LORD cast out before the children of Israel.
25ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem:
26கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.And he took away the treasures of the house of the LORD, and the treasures of the king's house; he even took away all: and he took away all the shields of gold which Solomon had made.
27அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.And king Rehoboam made in their stead brazen shields, and committed them unto the hands of the chief of the guard, which kept the door of the king's house.
28ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.And it was so, when the king went into the house of the LORD, that the guard bare them, and brought them back into the guard chamber.
29ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.Now the rest of the acts of Rehoboam, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.And there was war between Rehoboam and Jeroboam all their days.
31ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother's name was Naamah an Ammonitess. And Abijam his son reigned in his stead.
1Akkaalaththilae yeropeyaamin kumaaranaakiya apiyaa viyaathiyil vilunthaan.At that time Abijah the son of Jeroboam fell sick.
2Appoluthu yeropeyaam than manaiviyaip paarththu: nee elunthu, nee yeropeyaamin manaiviyentu oruvarum ariyaathapatikku vaeshammaari seelovukkup po; intha janaththinmael naan raajaavaavaen entu ennotae sonna theerkkatharisiyaakiya akiyaa angae irukkiraan.And Jeroboam said to his wife, Arise, I pray thee, and disguise thyself, that thou be not known to be the wife of Jeroboam; and get thee to Shiloh: behold, there is Ahijah the prophet, which told me that I should be king over this people.
3Nee un kaiyilae paththu appangalaiyum, panniyaarangalaiyum, oru kalasam thaenaiyum eduththukkonndu avanidaththukkup po; pillaikkuch sampavikkappokirathu innathentu avan unakku arivippaan entan.And take with thee ten loaves, and cracknels, and a cruse of honey, and go to him: he shall tell thee what shall become of the child.
4Appatiyae yeropeyaamin manaivi seythaal; aval elunthu seelovukkup poy, akiyaavin veettirkul piravaesiththaal; akiyaavo muthir vayathaanathinaal avan kannkal mangalatainthu paarkkak koodaathirunthaan.And Jeroboam's wife did so, and arose, and went to Shiloh, and came to the house of Ahijah. But Ahijah could not see; for his eyes were set by reason of his age.
5Karththar akiyaavinidaththil: itho, yeropeyaamin manaivi viyaathiyaayirukkira than kumaaranukkaaka unnai oru viseshamkaetka varukiraal; nee avalukku inna inna pirakaaramaakach sollavaenndum; aval utpiravaesikkirapothu, thannai anniya sthireeyaakak kaannpippaal entar.And the LORD said unto Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee for her son; for he is sick: thus and thus shalt thou say unto her: for it shall be, when she cometh in, that she shall feign herself to be another woman.
6Aakaiyaal vaasarpatikkul piravaesikkum avalutaiya nataiyin saththaththai akiyaa kaettavudanae, avan: yeropeyaamin manaiviyae, ullae vaa; unnai anniya sthireeyaakak kaannpikkirathenna? Thukkaseythiyai unakku arivikka naan anuppappattaேn.And it was so, when Ahijah heard the sound of her feet, as she came in at the door, that he said, Come in, thou wife of Jeroboam; why feignest thou thyself to be another? for I am sent to thee with heavy tidings.
7Nee poy yeropeyaamai Nnokki: isravaelin thaevanaakiya Karththar sollukirathu ennavental: janaththinintu unnai naan uyarththi, unnai Israel ennum en janaththinmael athipathiyaaka vaiththaen.Go, tell Jeroboam, Thus saith the LORD God of Israel, Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,
8Naan raajyapaaraththaith David vamsaththaarin kaiyilirunthu pidungi unakkuk koduththaen; aanaalum en karpanaikalaik kaikkonndu, en paarvaikkuch semmaiyaanathaiyae seyya than mulu iruthayaththodum ennaip pinpattina en thaasanaakiya thaaveethaip pola nee iraamal,And rent the kingdom away from the house of David, and gave it thee: and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in mine eyes;
9Unakku munniruntha ellaaraip paarkkilum pollaappuch seythaay; enakkuk kopam unndaakka, nee poy unakku anniya thaevarkalaiyum vaarkkappatta vikkirakangalaiyum unndupannnni, unakkup purampae ennaith thallivittay.But hast done evil above all that were before thee: for thou hast gone and made thee other gods, and molten images, to provoke me to anger, and hast cast me behind thy back:
10Aakaiyaal itho, naan yeropeyaamutaiya veettinmael pollaappai varappannnni, yeropeyaamukku, suvarmael neervidum oru naay muthalaayiraathapatikku, isravaelilae ataipattavanaiyum vidupattavanaiyum sangaarampannnni, kuppai kaliththuppodappadukirathu pola yeropeyaamin pinnatiyaarai avarkal kattaோtae attaுp pokumattum kaliththuppoduvaen entar.Therefore, behold, I will bring evil upon the house of Jeroboam, and will cut off from Jeroboam him that pisseth against the wall, and him that is shut up and left in Israel, and will take away the remnant of the house of Jeroboam, as a man taketh away dung, till it be all gone.
11Yeropeyaamin santhathiyaaril pattanaththilae saakiravanai naaykal thinnum; veliyilae saakiravanai aakaayaththin paravaikal thinnum; Karththar ithai uraiththaar.Him that dieth of Jeroboam in the city shall the dogs eat; and him that dieth in the field shall the fowls of the air eat: for the LORD hath spoken it.
12Aakaiyaal nee elunthu, un veettukkup po, un kaalkal pattanaththirkul piravaesikkaiyil pillaiyaanndaan seththuppovaan.Arise thou therefore, get thee to thine own house: and when thy feet enter into the city, the child shall die.
13Avanukkaaka isravaelarellaarum thukkangaொnndaati avanai adakkam pannnuvaarkal; yeropeyaamin veettaril isravaelil thaevanaakiya karththarukku munpaaka avanidaththilae nalla kaariyam kaanappattathinaal, yeropeyaamil santhathiyil avan oruvanae kallaraikkutpaduvaan.And all Israel shall mourn for him, and bury him: for he only of Jeroboam shall come to the grave, because in him there is found some good thing toward the LORD God of Israel in the house of Jeroboam.
14Aanaalum Karththar thamakku isravaelinmael oru raajaavai elumpappannnuvaar; avan annaalilae yeropeyaamin veettaraich sangarippaan; ippothae ithu nadanthaeraுm.Moreover the LORD shall raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.
15Thannnneerilae naanal asaikirathu pola, Karththar isravaelai muriththasaiyappannnni, avarkal pithaakkalukkuth thaam koduththa intha nalla thaesaththilirunthu isravaelai vaerotae pidungi, avarkal thangalukku thoppu vikkirakangalai vaiththu, karththarukkuk kopam unndaakkinapatiyinaal, avarkalai nathikkappaalae sitharatiththu,For the LORD shall smite Israel, as a reed is shaken in the water, and he shall root up Israel out of this good land, which he gave to their fathers, and shall scatter them beyond the river, because they have made their groves, provoking the LORD to anger.
16Yeropeyaam seythathum isravaelaich seyyappannnninathumaana paavaththinimiththam isravaelai oppukkoduththuviduvaar entan.And he shall give Israel up because of the sins of Jeroboam, who did sin, and who made Israel to sin.
17Appoluthu yeropeyaamin manaivi elunthu purappattu thirsaavukku vanthaal; aval vaasarpatiyilae varukaiyil pillaiyaanndaan seththupponaan.And Jeroboam's wife arose, and departed, and came to Tirzah: and when she came to the threshold of the door, the child died;
18Karththar theerkkatharisiyaakiya akiyaa ennum thamathu ooliyakkaaranaik konndu sonna vaarththaiyinpatiyae, avarkal avanai adakkampannnni, isravaelar ellaarum avanukkaakath thukkangaொnndaatinaarkal.And they buried him; and all Israel mourned for him, according to the word of the LORD, which he spake by the hand of his servant Ahijah the prophet.
19Yeropeyaam yuththampannnninathum aanndathumaana avanutaiya matta varththamaanangal Israel raajaakkalin naalaakamap pusthakaththil eluthiyirukkirathu.And the rest of the acts of Jeroboam, how he warred, and how he reigned, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
20Yeropeyaam raajyapaarampannnnina kaalam irupaththiranndu varusham; avan than pithaakkalotae niththiraiyatainthapin, avan kumaaranaakiya naathaap avan sthaanaththil raajaavaanaan.And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
21Saalomonin kumaaranaakiya rekopeyaam yoothaavilae raajyapaaram pannnninaan; rekopeyaam raajaavaakirapothu naarpaththoru vayathaayirunthu, Karththar thammutaiya naamam vilangumpati Israel koththirangalilellaam therinthukonnda nakaramaakiya erusalaemilae pathinaeluvarusham raajyapaarampannnninaan; ammon jaathiyaana avanutaiya thaayinpaer naamaal.And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother's name was Naamah an Ammonitess.
22Yoothaajanangal karththarin paarvaikkup pollaappaanathaich seythu, thaangal seythuvarukira thangalutaiya paavangalinaal thangal pithaakkal seytha ellaavattaைppaarkkilum avarukku athika erichchalai moottinaarkal.And Judah did evil in the sight of the LORD, and they provoked him to jealousy with their sins which they had committed, above all that their fathers had done.
23Avarkalum uyarntha sakala maettin maelum, pachchaைyaana sakala maraththingeelum, maetaikalaiyum silaikalaiyum thoppu vikkirakangalaiyum thangalukku unndaakkinaarkal.For they also built them high places, and images, and groves, on every high hill, and under every green tree.
24Thaesaththilae ilachchaைyaana punarchchikkaararum irunthaarkal; Karththar Israel puththirarukku munpaakath thuraththivitta jaathikalutaiya aruvaruppukalin patiyellaam seythaarkal.And there were also sodomites in the land: and they did according to all the abominations of the nations which the LORD cast out before the children of Israel.
25Rekopeyaam raajyapaarampannnum ainthaam varushaththilae, ekipthin raajaavaakiya seeshaak erusalaemukku virothamaay vanthu,And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem:
26Karththarutaiya aalayaththin pokkishangalaiyum, raajaavutaiya aramanaiyin pokkishangalaiyum, saalomon seyviththa pon parisaikal aakiya sakalaththaiyum eduththukkonndu poyvittan.And he took away the treasures of the house of the LORD, and the treasures of the king's house; he even took away all: and he took away all the shields of gold which Solomon had made.
27Avaikalukkup pathilaaka raajaavaakiya rekopeyaam vennkalap parisaikalaich seyviththu, avaikalai raajaavin vaasarpatiyaik kaakkira sevakarutaiya thalaivarin kaiyil oppuviththaan.And king Rehoboam made in their stead brazen shields, and committed them unto the hands of the chief of the guard, which kept the door of the king's house.
28Raajaa karththarutaiya aalayaththukkul piravaesikkumpothu, aramanaich sevakar avaikalaip pitiththukkonndu poy, thirumpath thangal araiyilae vaippaarkal.And it was so, when the king went into the house of the LORD, that the guard bare them, and brought them back into the guard chamber.
29Rekopeyaamin matta varththamaanangalum, avan seythavai yaavum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.Now the rest of the acts of Rehoboam, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
30Rekopeyaamukkum yeropeyaamukkum avarkal iruntha naatkalilellaam yuththam nadanthukonntirunthathu.And there was war between Rehoboam and Jeroboam all their days.
31Rekopeyaam than pithaakkalotae niththiraiyatainthu, thaaveethin nakaraththil than pithaakkalanntaiyil adakkampannnappattan; ammon jaathiyaana avan thaaykku naamaal entu paer; avan kumaaranaakiya apiyaam avan sthaanaththil raajaavaanaan.And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother's name was Naamah an Ammonitess. And Abijam his son reigned in his stead.