Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Devane Nyana - நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்

போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே

காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்

சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே

இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே

ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே

கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே

Nalla Devane Nyana Lyrics in English

Nalla thaevanae njaana jeevanae valla umathu karunnai thannai vaalththip pottaுvaenpona raavilae pollaangintiyae aana nalla arulinaalae anpaayk kaaththeeraekaalaiyaik kanntaen Karththar ummaiyae saalavum thuthiththup pottich saarnthu kolluvaensenta raavathin irulaip polavae entan paava irulaippokki ilangap pannnumaeintu naanumae inpamaakavae untan valiyil nadakkak karunnai uthavavaenumaeoliyin pillaiyaay ookkamaakavae eliyan intum nadakka aavi eentharulumaekaiyaik kaavumae kannnnaik kaavumae meyyaik kaaththu entan manathai mikavum kaavumae

PowerPoint Presentation Slides for the song Nalla Devane Nyana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Devane Nyana – நல்ல தேவனே ஞான ஜீவனே PPT
Nalla Devane Nyana PPT

காவுமே நல்ல கருணை என்றன் தேவனே ஞான ஜீவனே வல்ல உமது தன்னை வாழ்த்திப் போற்றுவேன்போன ராவிலே பொல்லாங்கின்றியே ஆன அருளினாலே அன்பாய்க் காத்தீரேகாலையைக் கண்டேன் தமிழ்