ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
Tamil Indian Revised Version
ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது.
Tamil Easy Reading Version
ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள்.
Thiru Viviliam
ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
King James Version (KJV)
Now Abraham and Sarah were old and well stricken in age; and it ceased to be with Sarah after the manner of women.
American Standard Version (ASV)
Now Abraham and Sarah were old, `and’ well stricken in age; it had ceased to be with Sarah after the manner of women.
Bible in Basic English (BBE)
Now Abraham and Sarah were very old, and Sarah was past the time for giving birth.
Darby English Bible (DBY)
Now Abraham and Sarah were old [and] advanced in age: it had ceased to be with Sarah after the manner of women.
Webster’s Bible (WBT)
Now Abraham and Sarah were old and far advanced in age; and it ceased to be with Sarah after the manner of women.
World English Bible (WEB)
Now Abraham and Sarah were old, well advanced in age. It had ceased to be with Sarah after the manner of women.
Young’s Literal Translation (YLT)
And Sarah is hearkening at the opening of the tent, which is behind him;
ஆதியாகமம் Genesis 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
Now Abraham and Sarah were old and well stricken in age; and it ceased to be with Sarah after the manner of women.
| וְאַבְרָהָ֤ם | wĕʾabrāhām | veh-av-ra-HAHM | |
| וְשָׂרָה֙ | wĕśārāh | veh-sa-RA | |
| זְקֵנִ֔ים | zĕqēnîm | zeh-kay-NEEM | |
| בָּאִ֖ים | bāʾîm | ba-EEM | |
| בַּיָּמִ֑ים | bayyāmîm | ba-ya-MEEM | |
| חָדַל֙ | ḥādal | ha-DAHL | |
| לִֽהְי֣וֹת | lihĕyôt | lee-heh-YOTE | |
| לְשָׂרָ֔ה | lĕśārâ | leh-sa-RA | |
| אֹ֖רַח | ʾōraḥ | OH-rahk | |
| כַּנָּשִֽׁים׃ | kannāšîm | ka-na-SHEEM |
Cross Reference
ஆதியாகமம் 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
எபிரெயர் 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
ரோமர் 4:18
உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
லுூக்கா 1:36
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
லுூக்கா 1:18
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
லுூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
லேவியராகமம் 15:19
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
ஆதியாகமம் 31:35
அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.
ஆதியாகமம் 17:24
ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
Tags ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று
Genesis 18:11 in Tamil Concordance Genesis 18:11 in Tamil Interlinear Genesis 18:11 in Tamil Image