Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 6:21 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 6 Deuteronomy 6:21

உபாகமம் 6:21
நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.

Tamil Easy Reading Version
நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார்.

Thiru Viviliam
நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.

Deuteronomy 6:20Deuteronomy 6Deuteronomy 6:22

King James Version (KJV)
Then thou shalt say unto thy son, We were Pharaoh’s bondmen in Egypt; and the LORD brought us out of Egypt with a mighty hand:

American Standard Version (ASV)
then thou shalt say unto thy son, We were Pharaoh’s bondmen in Egypt: and Jehovah brought us out of Egypt with a mighty hand;

Bible in Basic English (BBE)
Then you will say to your son, We were servants under Pharaoh’s yoke in Egypt; and the Lord took us out of Egypt with a strong hand:

Darby English Bible (DBY)
then thou shalt say unto thy son, We were Pharaoh’s bondmen in Egypt; and Jehovah brought us out of Egypt with a powerful hand;

Webster’s Bible (WBT)
Then thou shalt say to thy son, We were Pharoah’s bond-men in Egypt: and the LORD brought us out of Egypt with a mighty hand:

World English Bible (WEB)
then you shall tell your son, We were Pharaoh’s bondservants in Egypt: and Yahweh brought us out of Egypt with a mighty hand;

Young’s Literal Translation (YLT)
then thou hast said to thy son, Servants we have been to Pharaoh in Egypt, and Jehovah bringeth us out of Egypt by a high hand;

உபாகமம் Deuteronomy 6:21
நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Then thou shalt say unto thy son, We were Pharaoh's bondmen in Egypt; and the LORD brought us out of Egypt with a mighty hand:

וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
לְבִנְךָ֔lĕbinkāleh-veen-HA
עֲבָדִ֛יםʿăbādîmuh-va-DEEM
הָיִ֥ינוּhāyînûha-YEE-noo
לְפַרְעֹ֖הlĕparʿōleh-fahr-OH
בְּמִצְרָ֑יִםbĕmiṣrāyimbeh-meets-RA-yeem
וַיֹּֽצִיאֵ֧נוּwayyōṣîʾēnûva-yoh-tsee-A-noo
יְהוָ֛הyĕhwâyeh-VA
מִמִּצְרַ֖יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
בְּיָ֥דbĕyādbeh-YAHD
חֲזָקָֽה׃ḥăzāqâhuh-za-KA

Cross Reference

யாத்திராகமம் 20:2
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

எபேசியர் 2:11
ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,

ரோமர் 6:17
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

எரேமியா 32:20
இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,

ஏசாயா 51:1
நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

சங்கீதம் 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

நெகேமியா 9:9
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.

உபாகமம் 26:5
அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.

உபாகமம் 15:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

உபாகமம் 5:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் 5:6
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

யாத்திராகமம் 13:3
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

யாத்திராகமம் 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.


Tags நீ உன் புத்திரனை நோக்கி நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம் கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்
Deuteronomy 6:21 in Tamil Concordance Deuteronomy 6:21 in Tamil Interlinear Deuteronomy 6:21 in Tamil Image