Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 28:12 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 28 Deuteronomy 28:12

உபாகமம் 28:12
ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

Tamil Indian Revised Version
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

Tamil Easy Reading Version
கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது.

Thiru Viviliam
தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்கமாட்டாய்.

Deuteronomy 28:11Deuteronomy 28Deuteronomy 28:13

King James Version (KJV)
The LORD shall open unto thee his good treasure, the heaven to give the rain unto thy land in his season, and to bless all the work of thine hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow.

American Standard Version (ASV)
Jehovah will open unto thee his good treasure the heavens, to give the rain of thy land in its season, and to bless all the work of thy hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow.

Bible in Basic English (BBE)
Opening his store-house in heaven, the Lord will send rain on your land at the right time, blessing all the work of your hands: other nations will make use of your wealth, and you will have no need of theirs.

Darby English Bible (DBY)
Jehovah will open to thee his good treasure, the heavens, to give rain unto thy land in its season, and to bless all the work of thy hand; and thou shalt lend unto many nations, but thou shalt not borrow.

Webster’s Bible (WBT)
The LORD shall open to thee his good treasure, the heaven to give rain to thy land in its season, and to bless all the work of thy hand: and thou shalt lend to many nations, and thou shalt not borrow.

World English Bible (WEB)
Yahweh will open to you his good treasure in the sky, to give the rain of your land in its season, and to bless all the work of your hand: and you shall lend to many nations, and you shall not borrow.

Young’s Literal Translation (YLT)
`Jehovah doth open to thee his good treasure — the heavens — to give the rain of thy land in its season, and to bless all the work of thy hand, and thou hast lent to many nations, and thou — thou dost not borrow.

உபாகமம் Deuteronomy 28:12
ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
The LORD shall open unto thee his good treasure, the heaven to give the rain unto thy land in his season, and to bless all the work of thine hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow.

יִפְתַּ֣חyiptaḥyeef-TAHK
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
לְ֠ךָlĕkāLEH-ha
אֶתʾetet
אֽוֹצָר֨וֹʾôṣārôoh-tsa-ROH
הַטּ֜וֹבhaṭṭôbHA-tove
אֶתʾetet
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
לָתֵ֤תlātētla-TATE
מְטַֽרmĕṭarmeh-TAHR
אַרְצְךָ֙ʾarṣĕkāar-tseh-HA
בְּעִתּ֔וֹbĕʿittôbeh-EE-toh
וּלְבָרֵ֕ךְûlĕbārēkoo-leh-va-RAKE
אֵ֖תʾētate
כָּלkālkahl
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
יָדֶ֑ךָyādekāya-DEH-ha
וְהִלְוִ֙יתָ֙wĕhilwîtāveh-heel-VEE-TA
גּוֹיִ֣םgôyimɡoh-YEEM
רַבִּ֔יםrabbîmra-BEEM
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
לֹ֥אlōʾloh
תִלְוֶֽה׃tilweteel-VEH

Cross Reference

உபாகமம் 15:6
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

உபாகமம் 14:29
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

யோவேல் 2:23
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

உபாகமம் 11:14
நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

லேவியராகமம் 26:4
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

நீதிமொழிகள் 22:7
ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

சங்கீதம் 135:7
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

சங்கீதம் 65:9
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

உபாகமம் 28:44
அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.

உபாகமம் 15:10
அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

யோபு 38:22
உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?


Tags ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும் கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய்
Deuteronomy 28:12 in Tamil Concordance Deuteronomy 28:12 in Tamil Interlinear Deuteronomy 28:12 in Tamil Image