1 சாமுவேல் 17:47
கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
Tamil Easy Reading Version
ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.
Thiru Viviliam
மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார்.
King James Version (KJV)
And all this assembly shall know that the LORD saveth not with sword and spear: for the battle is the LORD’s, and he will give you into our hands.
American Standard Version (ASV)
and that all this assembly may know that Jehovah saveth not with sword and spear: for the battle is Jehovah’s, and he will give you into our hand.
Bible in Basic English (BBE)
And all these people who are here today may see that the Lord does not give salvation by sword and spear: for the fight is the Lord’s, and he will give you up into our hands.
Darby English Bible (DBY)
and all this congregation shall know that Jehovah saves not with sword and spear; for the battle is Jehovah’s, and he will give you into our hands.
Webster’s Bible (WBT)
And all this assembly shall know that the LORD saveth not with sword and spear: for the battle is the LORD’S, and he will give you into our hands.
World English Bible (WEB)
and that all this assembly may know that Yahweh doesn’t save with sword and spear: for the battle is Yahweh’s, and he will give you into our hand.
Young’s Literal Translation (YLT)
and all this assembly do know that not by sword and by spear doth Jehovah save, that the battle `is’ Jehovah’s, and He hath given you into our hand.’
1 சாமுவேல் 1 Samuel 17:47
கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
And all this assembly shall know that the LORD saveth not with sword and spear: for the battle is the LORD's, and he will give you into our hands.
| וְיֵֽדְעוּ֙ | wĕyēdĕʿû | veh-yay-deh-OO | |
| כָּל | kāl | kahl | |
| הַקָּהָ֣ל | haqqāhāl | ha-ka-HAHL | |
| הַזֶּ֔ה | hazze | ha-ZEH | |
| כִּֽי | kî | kee | |
| לֹ֛א | lōʾ | loh | |
| בְּחֶ֥רֶב | bĕḥereb | beh-HEH-rev | |
| וּבַֽחֲנִ֖ית | ûbaḥănît | oo-va-huh-NEET | |
| יְהוֹשִׁ֣יעַ | yĕhôšîaʿ | yeh-hoh-SHEE-ah | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כִּ֤י | kî | kee | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| הַמִּלְחָמָ֔ה | hammilḥāmâ | ha-meel-ha-MA | |
| וְנָתַ֥ן | wĕnātan | veh-na-TAHN | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| בְּיָדֵֽנוּ׃ | bĕyādēnû | beh-ya-day-NOO |
Cross Reference
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஓசியா 1:7
யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.
சங்கீதம் 44:6
என் வில்லை நான் நம்பேன். என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
1 சாமுவேல் 14:6
யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
சங்கீதம் 33:16
எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
2 நாளாகமம் 20:15
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
சங்கீதம் 46:11
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
2 நாளாகமம் 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
Tags கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும் யுத்தம் கர்த்தருடையது அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்
1 Samuel 17:47 in Tamil Concordance 1 Samuel 17:47 in Tamil Interlinear 1 Samuel 17:47 in Tamil Image