2 நாளாகமம் 34:3
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
Tamil Indian Revised Version
அவன் தன் அரசாட்சியின் எட்டாம் வருடத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருடத்தில் மேடைகள், தோப்புகள், உருவங்கள், சிலைகள் ஆகிய இவைகள் இல்லாமல்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தத் தொடங்கினான்.
Tamil Easy Reading Version
யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா அரசனானப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான்.
Thiru Viviliam
அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவர் இன்னும் இளைஞராக இருந்தபோது, அவர் மூதாதை தாவீதின் கடவுளை நாடிச்செல்லலானார்; தமது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், தொழுகை மேடுகள், அசேராக் கம்பங்கள், செதுக்கப்பட்ட சிலைகள், வார்க்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை அகற்றி, யூதாவையும் எருசலேமையும் தூய்மையாக்கத் தொடங்கினார்.
Other Title
யோசியாவின் சீர்திருத்தங்கள்
King James Version (KJV)
For in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father: and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the groves, and the carved images, and the molten images.
American Standard Version (ASV)
For in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father; and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the Asherim, and the graven images, and the molten images.
Bible in Basic English (BBE)
In the eighth year of his rule, while he was still young, his heart was first turned to the God of his father David; and in the twelfth year he undertook the clearing away of all the high places and the pillars and the images of wood and metal from Judah and Jerusalem.
Darby English Bible (DBY)
And in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father; and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the Asherahs, and the graven images, and the molten images.
Webster’s Bible (WBT)
For in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father: and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the groves, and the carved images, and the molten images.
World English Bible (WEB)
For in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father; and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the Asherim, and the engraved images, and the molten images.
Young’s Literal Translation (YLT)
And in the eighth year of his reign (and he yet a youth), he hath begun to seek to the God of David his father, and in the twelfth year he hath begun to cleanse Judah and Jerusalem from the high places, and the shrines, and the graven images, and the molten images.
2 நாளாகமம் 2 Chronicles 34:3
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
For in the eighth year of his reign, while he was yet young, he began to seek after the God of David his father: and in the twelfth year he began to purge Judah and Jerusalem from the high places, and the groves, and the carved images, and the molten images.
| וּבִשְׁמוֹנֶ֨ה | ûbišmône | oo-veesh-moh-NEH | |
| שָׁנִ֜ים | šānîm | sha-NEEM | |
| לְמָלְכ֗וֹ | lĕmolkô | leh-mole-HOH | |
| וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO | |
| עוֹדֶ֣נּוּ | ʿôdennû | oh-DEH-noo | |
| נַ֔עַר | naʿar | NA-ar | |
| הֵחֵ֕ל | hēḥēl | hay-HALE | |
| לִדְר֕וֹשׁ | lidrôš | leed-ROHSH | |
| לֵֽאלֹהֵ֖י | lēʾlōhê | lay-loh-HAY | |
| דָּוִ֣יד | dāwîd | da-VEED | |
| אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO | |
| וּבִשְׁתֵּ֧ים | ûbištêm | oo-veesh-TAME | |
| עֶשְׂרֵ֣ה | ʿeśrē | es-RAY | |
| שָׁנָ֗ה | šānâ | sha-NA | |
| הֵחֵל֙ | hēḥēl | hay-HALE | |
| לְטַהֵ֔ר | lĕṭahēr | leh-ta-HARE | |
| אֶת | ʾet | et | |
| יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA | |
| וִיר֣וּשָׁלִַ֔ם | wîrûšālaim | vee-ROO-sha-la-EEM | |
| מִן | min | meen | |
| הַבָּמוֹת֙ | habbāmôt | ha-ba-MOTE | |
| וְהָ֣אֲשֵׁרִ֔ים | wĕhāʾăšērîm | veh-HA-uh-shay-REEM | |
| וְהַפְּסִלִ֖ים | wĕhappĕsilîm | veh-ha-peh-see-LEEM | |
| וְהַמַּסֵּכֽוֹת׃ | wĕhammassēkôt | veh-ha-ma-say-HOTE |
Cross Reference
2 நாளாகமம் 33:22
அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.
2 நாளாகமம் 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
நீதிமொழிகள் 8:17
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
2 நாளாகமம் 33:17
ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
2 தீமோத்தேயு 3:15
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
பிரசங்கி 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.
2 நாளாகமம் 30:14
அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலேபோட்டார்கள்.
1 நாளாகமம் 29:1
பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.
1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
1 நாளாகமம் 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.
2 இராஜாக்கள் 23:14
சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.
2 இராஜாக்கள் 23:4
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.
2 இராஜாக்கள் 18:4
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
1 இராஜாக்கள் 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
லேவியராகமம் 26:30
நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
Tags அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில் இன்னும் இளவயதாயிருக்கையில் தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்
2 Chronicles 34:3 in Tamil Concordance 2 Chronicles 34:3 in Tamil Interlinear 2 Chronicles 34:3 in Tamil Image