சங்கீதம் 40:14
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
Tamil Indian Revised Version
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
Tamil Easy Reading Version
அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள். கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும். அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும்.
Thiru Viviliam
⁽என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்␢ அனைவரும்␢ அவமானமும் குழப்பமும் அடையட்டும்!␢ என் கேட்டில் மகிழ்வுறுவோர்␢ தலைகுனிந்து பின்னடையட்டும்!⁾
King James Version (KJV)
Let them be ashamed and confounded together that seek after my soul to destroy it; let them be driven backward and put to shame that wish me evil.
American Standard Version (ASV)
Let them be put to shame and confounded together That seek after my soul to destroy it: Let them be turned backward and brought to dishonor That delight in my hurt.
Bible in Basic English (BBE)
Let those who go after my soul for its destruction have shame and trouble together; let them be turned back and made foolish who take pleasure in my trouble.
Darby English Bible (DBY)
Let them be ashamed and brought to confusion together that seek after my soul to destroy it; let them be turned backward and confounded that take pleasure in mine adversity;
Webster’s Bible (WBT)
Be pleased, O LORD, to deliver me: O LORD, make haste to help me.
World English Bible (WEB)
Let them be disappointed and confounded together who seek after my soul to destroy it. Let them be turned backward and brought to dishonor who delight in my hurt.
Young’s Literal Translation (YLT)
They are ashamed and confounded together, Who are seeking my soul to destroy it, They are turned backward, And are ashamed, who are desiring my evil.
சங்கீதம் Psalm 40:14
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
Let them be ashamed and confounded together that seek after my soul to destroy it; let them be driven backward and put to shame that wish me evil.
| יֵ֘בֹ֤שׁוּ | yēbōšû | YAY-VOH-shoo | |
| וְיַחְפְּר֨וּ׀ | wĕyaḥpĕrû | veh-yahk-peh-ROO | |
| יַחַד֮ | yaḥad | ya-HAHD | |
| מְבַקְשֵׁ֥י | mĕbaqšê | meh-vahk-SHAY | |
| נַפְשִׁ֗י | napšî | nahf-SHEE | |
| לִסְפּ֫וֹתָ֥הּ | lispôtāh | lees-POH-TA | |
| יִסֹּ֣גוּ | yissōgû | yee-SOH-ɡoo | |
| אָ֭חוֹר | ʾāḥôr | AH-hore | |
| וְיִכָּלְמ֑וּ | wĕyikkolmû | veh-yee-kole-MOO | |
| חֲ֝פֵצֵ֗י | ḥăpēṣê | HUH-fay-TSAY | |
| רָעָתִֽי׃ | rāʿātî | ra-ah-TEE |
Cross Reference
சங்கீதம் 35:4
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
சங்கீதம் 71:13
என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
சங்கீதம் 35:26
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
யோவான் 18:6
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
மத்தேயு 21:38
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
ஏசாயா 45:24
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 41:11
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
சங்கீதம் 70:2
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
சங்கீதம் 31:17
கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.
சங்கீதம் 9:3
என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
Tags என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக
Psalm 40:14 in Tamil Concordance Psalm 40:14 in Tamil Interlinear Psalm 40:14 in Tamil Image