சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾
King James Version (KJV)
O LORD, how manifold are thy works! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
American Standard Version (ASV)
O Jehovah, how manifold are thy works! In wisdom hast thou made them all: The earth is full of thy riches.
Bible in Basic English (BBE)
O Lord, how great is the number of your works! in wisdom you have made them all; the earth is full of the things you have made.
Darby English Bible (DBY)
How manifold are thy works, O Jehovah! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
World English Bible (WEB)
Yahweh, how many are your works! In wisdom have you made them all. The earth is full of your riches.
Young’s Literal Translation (YLT)
How many have been Thy works, O Jehovah, All of them in wisdom Thou hast made, Full is the earth of thy possessions.
சங்கீதம் Psalm 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
O LORD, how manifold are thy works! in wisdom hast thou made them all: the earth is full of thy riches.
| מָֽה | mâ | ma | |
| רַבּ֬וּ | rabbû | RA-boo | |
| מַעֲשֶׂ֨יךָ׀ | maʿăśêkā | ma-uh-SAY-ha | |
| יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| כֻּ֭לָּם | kullom | KOO-lome | |
| בְּחָכְמָ֣ה | bĕḥokmâ | beh-hoke-MA | |
| עָשִׂ֑יתָ | ʿāśîtā | ah-SEE-ta | |
| מָלְאָ֥ה | molʾâ | mole-AH | |
| הָ֝אָ֗רֶץ | hāʾāreṣ | HA-AH-rets | |
| קִנְיָנֶֽךָ׃ | qinyānekā | keen-ya-NEH-ha |
Cross Reference
எரேமியா 10:12
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
எபேசியர் 3:10
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
எபேசியர் 1:8
அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
நீதிமொழிகள் 8:22
கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
சங்கீதம் 136:5
வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 107:31
அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
சங்கீதம் 50:10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
சங்கீதம் 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
நெகேமியா 9:6
நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
ஆதியாகமம் 1:31
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
1 தீமோத்தேயு 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
நீதிமொழிகள் 3:19
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 65:11
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
ஆதியாகமம் 1:24
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1:11
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Tags கர்த்தாவே உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர் பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது
Psalm 104:24 in Tamil Concordance Psalm 104:24 in Tamil Interlinear Psalm 104:24 in Tamil Image