Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 37:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 37 Jeremiah 37:17

எரேமியா 37:17
பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான் அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.

Thiru Viviliam
அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார்.

Jeremiah 37:16Jeremiah 37Jeremiah 37:18

King James Version (KJV)
Then Zedekiah the king sent, and took him out: and the king asked him secretly in his house, and said, Is there any word from the LORD? And Jeremiah said, There is: for, said he, thou shalt be delivered into the hand of the king of Babylon.

American Standard Version (ASV)
Then Zedekiah the king sent, and fetched him: and the king asked him secretly in his house, and said, Is there any word from Jehovah? And Jeremiah said, There is. He said also, Thou shalt be delivered into the hand of the king of Babylon.

Bible in Basic English (BBE)
Then King Zedekiah sent and got him out: and the king, questioning him secretly in his house, said, Is there any word from the Lord? And Jeremiah said, There is. Then he said, You will be given up into the hands of the king of Babylon.

Darby English Bible (DBY)
king Zedekiah sent and took him out. And the king asked of him secretly in his house, and said, Is there any word from Jehovah? And Jeremiah said, There is; and he said, Thou shalt be given into the hand of the king of Babylon.

World English Bible (WEB)
Then Zedekiah the king sent, and fetched him: and the king asked him secretly in his house, and said, Is there any word from Yahweh? Jeremiah said, There is. He said also, You shall be delivered into the hand of the king of Babylon.

Young’s Literal Translation (YLT)
and the king Zedekiah sendeth, and taketh him, and the king asketh him in his house in secret, and saith, `Is there a word from Jehovah?’ And Jeremiah saith, `There is,’ and he saith, `Into the hand of the king of Babylon thou art given.’

எரேமியா Jeremiah 37:17
பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
Then Zedekiah the king sent, and took him out: and the king asked him secretly in his house, and said, Is there any word from the LORD? And Jeremiah said, There is: for, said he, thou shalt be delivered into the hand of the king of Babylon.

וַיִּשְׁלַח֩wayyišlaḥva-yeesh-LAHK
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
צִדְקִיָּ֜הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
וַיִּקָּחֵ֗הוּwayyiqqāḥēhûva-yee-ka-HAY-hoo
וַיִּשְׁאָלֵ֨הוּwayyišʾālēhûva-yeesh-ah-LAY-hoo
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
בְּבֵיתוֹ֙bĕbêtôbeh-vay-TOH
בַּסֵּ֔תֶרbassēterba-SAY-ter
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
הֲיֵ֥שׁhăyēšhuh-YAYSH
דָּבָ֖רdābārda-VAHR
מֵאֵ֣תmēʾētmay-ATE
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
יֵ֔שׁyēšyaysh
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
בְּיַ֥דbĕyadbeh-YAHD
מֶֽלֶךְmelekMEH-lek
בָּבֶ֖לbābelba-VEL
תִּנָּתֵֽן׃tinnātēntee-na-TANE

Cross Reference

எரேமியா 21:7
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

எசேக்கியேல் 12:12
அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

எரேமியா 38:24
அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.

எரேமியா 38:14
பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

எரேமியா 38:5
அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கையில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக் கூடாது என்றான்.

எரேமியா 37:3
சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.

எரேமியா 24:8
புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,

எரேமியா 21:1
சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

1 இராஜாக்கள் 22:16
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

1 இராஜாக்கள் 14:1
அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.

மாற்கு 6:20
அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.

எசேக்கியேல் 21:25
இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவுவருங்காலத்தில் உன் நாள் வந்தது.

எசேக்கியேல் 17:19
அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆசையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

எரேமியா 39:6
பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

எரேமியா 34:21
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

எரேமியா 32:3
ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,

எரேமியா 29:16
ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,

எரேமியா 15:11
உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாக சொல்லுகிறேன்.

2 இராஜாக்கள் 3:11
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.


Tags பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான் அதற்கு எரேமியா உண்டு பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்
Jeremiah 37:17 in Tamil Concordance Jeremiah 37:17 in Tamil Interlinear Jeremiah 37:17 in Tamil Image