Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi - நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி

நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.

அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். — நீ

சரணங்கள்

1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே. — நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்த தமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? — நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்? — நீ

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். — நீ

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi Lyrics in English

Neeyunakkuch sonthamallavae; meetkappatta paavi,
Neeyunakkuch sonthamallavae.

Anupallavi

Neeyunakkuch sonthamallavae,
Nimalan Kristhu naatharkkae sontham. — nee

Saranangal

1. Siluvai maraththil thongi mariththaarae; thiruraththam, raththam
Thiru vilaavil vatiyuthu paarae;
Valiya parisaththaal konndaarae;
Vaana makimai yunakgeevaarae. — nee

2. Intha nantiyai maranthu ponaayo? Yaesuvaivittu
Engaeyaakilum marainthu thirivaayo?
Santha thamunathithayang kaayamum,
Saami kiristhinutaiya thallavo? — nee

3. Palaiya paavaththaasai varukutho? Pasaasinmaelae
Patchamunakkuth thirumpa varukutho?
Aliyum nimishath thaasai kaattiyae,
Akkinikkadal thalluvaanaen? — nee

4. Pilaikkinum avarkkae pilaippaayae; ulakaivittup
Piriyinum avarkkae marippaayae,
Ulaiththu mariththum uyirththa naatharin,
Uyarpathaviyil entum nilaippaay. — nee

PowerPoint Presentation Slides for the song Neeyunakku Sonthamallave Meetkappata Paavi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neeyunakku Sonthamallave Meetkappata Paavi – நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி PPT
Neeyunakku Sonthamallave Meetkappata Paavi PPT

நீயுனக்குச் சொந்தமல்லவே வருகுதோ அவர்க்கே மீட்கப்பட்ட பாவி அனுபல்லவி நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சரணங்கள் சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திருரத்தம் ரத்தம் திரு தமிழ்