Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி

நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.

அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். — நீ

சரணங்கள்

1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே. — நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்த தமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? — நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்? — நீ

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். — நீ

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi Lyrics in English

Neeyunakkuch sonthamallavae; meetkappatta paavi,
Neeyunakkuch sonthamallavae.

Anupallavi

Neeyunakkuch sonthamallavae,
Nimalan Kristhu naatharkkae sontham. — nee

Saranangal

1. Siluvai maraththil thongi mariththaarae; thiruraththam, raththam
Thiru vilaavil vatiyuthu paarae;
Valiya parisaththaal konndaarae;
Vaana makimai yunakgeevaarae. — nee

2. Intha nantiyai maranthu ponaayo? Yaesuvaivittu
Engaeyaakilum marainthu thirivaayo?
Santha thamunathithayang kaayamum,
Saami kiristhinutaiya thallavo? — nee

3. Palaiya paavaththaasai varukutho? Pasaasinmaelae
Patchamunakkuth thirumpa varukutho?
Aliyum nimishath thaasai kaattiyae,
Akkinikkadal thalluvaanaen? — nee

4. Pilaikkinum avarkkae pilaippaayae; ulakaivittup
Piriyinum avarkkae marippaayae,
Ulaiththu mariththum uyirththa naatharin,
Uyarpathaviyil entum nilaippaay. — nee

PowerPoint Presentation Slides for the song Neeyunakku Sonthamallave Meetkappata Paavi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி PPT
Neeyunakku Sonthamallave Meetkappata Paavi PPT

நீயுனக்குச் சொந்தமல்லவே வருகுதோ அவர்க்கே மீட்கப்பட்ட பாவி அனுபல்லவி நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சரணங்கள் சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திருரத்தம் ரத்தம் திரு English