ஆதியாகமம் 24:53
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
பின்பு அந்த வேலைக்காரன் வெள்ளிப் பொருட்களையும், தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும், ஆடைகளையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமல்லாமல், அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
பின்னர் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையெல்லாம் ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவன் அழகான ஆடைகளையும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன நகைகளையும் கொடுத்தான். அவன் ரெபெக்காளின் தாய், சகோதரன் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான்.
Thiru Viviliam
பிறகு, அவர் பொன், வெள்ளி நகைகளையும் ஆடைகளையும் எடுத்து ரெபேக்காவுக்குக் கொடுத்தார். அவர் சகோதரருக்கும் தாய்க்கும் விலையுயர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தார்.
King James Version (KJV)
And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah: he gave also to her brother and to her mother precious things.
American Standard Version (ASV)
And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah. He gave also to her brother and to her mother precious things.
Bible in Basic English (BBE)
Then he took jewels of silver and jewels of gold and fair robes and gave them to Rebekah: and he gave things of value to her mother and her brother.
Darby English Bible (DBY)
And the servant brought forth silver articles, and gold articles, and clothing, and he gave [them] to Rebecca; and he gave to her brother, and to her mother, precious things.
Webster’s Bible (WBT)
And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah: He gave also to her brother and to her mother precious things.
World English Bible (WEB)
The servant brought forth jewels of silver, and jewels of gold, and clothing, and gave them to Rebekah. He gave also to her brother and to her mother precious things.
Young’s Literal Translation (YLT)
and the servant taketh out vessels of silver, and vessels of gold, and garments, and giveth to Rebekah; precious things also he hath given to her brother and to her mother.
ஆதியாகமம் Genesis 24:53
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.
And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah: he gave also to her brother and to her mother precious things.
| וַיּוֹצֵ֨א | wayyôṣēʾ | va-yoh-TSAY | |
| הָעֶ֜בֶד | hāʿebed | ha-EH-ved | |
| כְּלֵי | kĕlê | keh-LAY | |
| כֶ֨סֶף | kesep | HEH-sef | |
| וּכְלֵ֤י | ûkĕlê | oo-heh-LAY | |
| זָהָב֙ | zāhāb | za-HAHV | |
| וּבְגָדִ֔ים | ûbĕgādîm | oo-veh-ɡa-DEEM | |
| וַיִּתֵּ֖ן | wayyittēn | va-yee-TANE | |
| לְרִבְקָ֑ה | lĕribqâ | leh-reev-KA | |
| וּמִ֨גְדָּנֹ֔ת | ûmigdānōt | oo-MEEɡ-da-NOTE | |
| נָתַ֥ן | nātan | na-TAHN | |
| לְאָחִ֖יהָ | lĕʾāḥîhā | leh-ah-HEE-ha | |
| וּלְאִמָּֽהּ׃ | ûlĕʾimmāh | oo-leh-ee-MA |
Cross Reference
யாத்திராகமம் 12:35
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
யாத்திராகமம் 11:2
இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.
யாத்திராகமம் 3:22
ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
ஏசாயா 39:2
எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.
உன்னதப்பாட்டு 4:13
உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும் மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
எஸ்றா 1:6
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
2 நாளாகமம் 21:3
அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும் யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.
உபாகமம் 33:13
யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,
ஆதியாகமம் 24:22
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,
ஆதியாகமம் 24:10
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
Tags பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் எடுத்து ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்
Genesis 24:53 in Tamil Concordance Genesis 24:53 in Tamil Interlinear Genesis 24:53 in Tamil Image