எரேமியா 3:6
யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
Tamil Indian Revised Version
யோசியா ராஜாவின் நாட்களில் கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான எல்லா மலையின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்செய்தாள்.
Tamil Easy Reading Version
யோசியா அரசன் யூதா நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில், கர்த்தர் என்னோடு பேசினார். அவர், “எரேமியா, இஸ்ரவேல் செய்த தீமைகளை நீ பார்த்தாய். எவ்வாறு அவள் எனக்கு விசுவாசமில்லாமல் நடந்துகொண்டாள், என்பதை நீ அறிவாய். ஒவ்வொரு மலை உச்சியின் மேலும் பச்சை மரங்களின் கீழும், விக்கிரகங்களோடும், சோரம் போய் அவள் பாவம் செய்தாள்.
Thiru Viviliam
யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.
King James Version (KJV)
The LORD said also unto me in the days of Josiah the king, Hast thou seen that which backsliding Israel hath done? she is gone up upon every high mountain and under every green tree, and there hath played the harlot.
American Standard Version (ASV)
Moreover Jehovah said unto me in the days of Josiah the king, Hast thou seen that which backsliding Israel hath done? she is gone up upon every high mountain and under every green tree, and there hath played the harlot.
Bible in Basic English (BBE)
And the Lord said to me in the days of Josiah the king, Have you seen what Israel, turning away from me, has done? She has gone up on every high mountain and under every branching tree, acting like a loose woman there.
Darby English Bible (DBY)
And Jehovah said unto me in the days of Josiah the king, Hast thou seen what backsliding Israel hath done? She hath gone up upon every high mountain and under every green tree, and there hath committed fornication.
World English Bible (WEB)
Moreover Yahweh said to me in the days of Josiah the king, Have you seen that which backsliding Israel has done? she is gone up on every high mountain and under every green tree, and there has played the prostitute.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, in the days of Josiah the king, `Hast thou seen that which backsliding Israel hath done? She is going on every high mountain, and unto the place of every green tree, and committeth fornication there.
எரேமியா Jeremiah 3:6
யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
The LORD said also unto me in the days of Josiah the king, Hast thou seen that which backsliding Israel hath done? she is gone up upon every high mountain and under every green tree, and there hath played the harlot.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA | |
| אֵלַ֗י | ʾēlay | ay-LAI | |
| בִּימֵי֙ | bîmēy | bee-MAY | |
| יֹאשִׁיָּ֣הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| הֲֽרָאִ֔יתָ | hărāʾîtā | huh-ra-EE-ta | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עָשְׂתָ֖ה | ʿośtâ | ose-TA | |
| מְשֻׁבָ֣ה | mĕšubâ | meh-shoo-VA | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| הֹלְכָ֨ה | hōlĕkâ | hoh-leh-HA | |
| הִ֜יא | hîʾ | hee | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| הַ֣ר | har | hahr | |
| גָּבֹ֗הַּ | gābōah | ɡa-VOH-ah | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| תַּ֛חַת | taḥat | TA-haht | |
| כָּל | kāl | kahl | |
| עֵ֥ץ | ʿēṣ | ayts | |
| רַעֲנָ֖ן | raʿănān | ra-uh-NAHN | |
| וַתִּזְנִי | wattiznî | va-teez-NEE | |
| שָֽׁם׃ | šām | shahm |
Cross Reference
1 இராஜாக்கள் 14:23
அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
எசேக்கியேல் 20:28
அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.
எசேக்கியேல் 16:31
சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
எசேக்கியேல் 16:24
நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
எரேமியா 17:2
உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
எரேமியா 7:24
அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.
எரேமியா 3:11
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
எரேமியா 3:8
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
எரேமியா 2:19
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 57:7
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
2 இராஜாக்கள் 17:7
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,
எசேக்கியேல் 23:11
அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று.
Tags யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா அவள் உயரமான சகல மலையின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் போய் அங்கே வேசித்தனம் பண்ணினாள்
Jeremiah 3:6 in Tamil Concordance Jeremiah 3:6 in Tamil Interlinear Jeremiah 3:6 in Tamil Image