Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:31 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:31

நியாயாதிபதிகள் 6:31
யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான்.

Thiru Viviliam
யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும், “நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா? அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா? பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான். பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும்” என்றார்.

Judges 6:30Judges 6Judges 6:32

King James Version (KJV)
And Joash said unto all that stood against him, Will ye plead for Baal? will ye save him? he that will plead for him, let him be put to death whilst it is yet morning: if he be a god, let him plead for himself, because one hath cast down his altar.

American Standard Version (ASV)
And Joash said unto all that stood against him, Will ye contend for Baal? Or will ye save him? he that will contend for him, let him be put to death whilst `it is yet’ morning: if he be a god, let him contend for himself, because one hath broken down his altar.

Bible in Basic English (BBE)
But Joash said to all those who were attacking him, Will you take up the cause of Baal? will you be his saviour? Let anyone who will take up his cause be put to death while it is still morning: if he is a god, let him take up his cause himself because of the pulling down of his altar.

Darby English Bible (DBY)
But Jo’ash said to all who were arrayed against him, “Will you contend for Ba’al? Or will you defend his cause? Whoever contends for him shall be put to death by morning. If he is a god, let him contend for himself, because his altar has been pulled down.”

Webster’s Bible (WBT)
And Joash said to all that stood against him, Will ye plead for Baal? will ye save him? he that will plead for him, let him be put to death whilst it is yet morning: if he is a god, let him plead for himself, because one hath cast down his altar.

World English Bible (WEB)
Joash said to all who stood against him, Will you contend for Baal? Or will you save him? he who will contend for him, let him be put to death while [it is yet] morning: if he be a god, let him contend for himself, because one has broken down his altar.

Young’s Literal Translation (YLT)
And Joash saith to all who have stood against him, `Ye, do ye plead for Baal? ye — do ye save him? he who pleadeth for him is put to death during the morning; if he `is’ a god he himself doth plead against him, because he hath broken down his altar.’

நியாயாதிபதிகள் Judges 6:31
யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.
And Joash said unto all that stood against him, Will ye plead for Baal? will ye save him? he that will plead for him, let him be put to death whilst it is yet morning: if he be a god, let him plead for himself, because one hath cast down his altar.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יוֹאָ֡שׁyôʾāšyoh-ASH
לְכֹל֩lĕkōlleh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
עָֽמְד֨וּʿāmĕdûah-meh-DOO
עָלָ֜יוʿālāywah-LAV
הַֽאַתֶּ֣ם׀haʾattemha-ah-TEM
תְּרִיב֣וּןtĕrîbûnteh-ree-VOON
לַבַּ֗עַלlabbaʿalla-BA-al
אִםʾimeem
אַתֶּם֙ʾattemah-TEM
תּֽוֹשִׁיע֣וּןtôšîʿûntoh-shee-OON
אוֹת֔וֹʾôtôoh-TOH
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יָרִ֥יבyārîbya-REEV
ל֛וֹloh
יוּמַ֖תyûmatyoo-MAHT
עַדʿadad
הַבֹּ֑קֶרhabbōqerha-BOH-ker
אִםʾimeem
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
הוּא֙hûʾhoo
יָ֣רֶבyārebYA-rev
ל֔וֹloh
כִּ֥יkee
נָתַ֖ץnātaṣna-TAHTS
אֶֽתʾetet
מִזְבְּחֽוֹ׃mizbĕḥômeez-beh-HOH

Cross Reference

யாத்திராகமம் 23:2
தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

1 கொரிந்தியர் 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எரேமியா 10:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

எரேமியா 10:5
அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 46:7
அதைத் தோளின்மேல் எடுத்து அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.

ஏசாயா 46:1
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

ஏசாயா 41:23
பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.

சங்கீதம் 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

1 இராஜாக்கள் 18:40
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.

1 இராஜாக்கள் 18:29
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

1 இராஜாக்கள் 18:27
மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

உபாகமம் 17:2
உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

உபாகமம் 13:5
அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.

எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.


Tags யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள் நீங்களா அதை இரட்சிப்பீர்கள் அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன் அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்
Judges 6:31 in Tamil Concordance Judges 6:31 in Tamil Interlinear Judges 6:31 in Tamil Image