Amos 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.2 அவர், ‘ஆமோஸ்! என்ன காண்கிறாய்?’ என்று கேட்டார்; நான், ‘கனிந்த பழங்கள் உள்ள கூடை’ என்றேன்.⁽ ஆண்டவர் என்னிடம்␢ தொடர்ந்து பேசினார்;␢ “என் மக்களாகிய இஸ்ரயேலின்␢ முடிவு வந்துவிட்டது;␢ இனி அவர்கள் நடுவே␢ ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.⁾3 ⁽அந்நாளில் கோவில் பாடல்கள்␢ புலம்பலாய் மாறும்;␢ கணக்கற்ற பிணங்கள்␢ உரிய மரியாதையின்றித்␢ தூக்கி யெறியப்படும்,␢ எங்கும் ஒரே அமைதி!’␢ என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.⁾4 ⁽“வறியோரை நசுக்கி,␢ நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை␢ அழிக்கின்றவர்களே,␢ இதைக் கேளுங்கள்;⁾5 ⁽‘நாம் தானியங்களை விற்பதற்கு␢ அமாவாசை எப்பொழுது முடியும்?␢ கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு␢ ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்?␢ மரக்காலைச்* சிறியதாக்கி,␢ எடைக்கல்லைக் கனமாக்கி,␢ கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;⁾6 ⁽வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும்␢ இரு காலணிக்கு␢ வறியோரையும் வாங்கலாம்;␢ கோதுமைப் பதர்களையும்␢ விற்கலாம்’ என்று␢ நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’⁾7 ⁽ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது␢ ஆணையிட்டுக் கூறுகின்றார்:␢ “அவர்களுடைய இந்தச் செயல்களுள்␢ ஒன்றையேனும்␢ நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.⁾8 ⁽இதனை முன்னிட்டு␢ நாடு நடுநடுங்காதா?␢ அதில் வாழ்வோர் அனைவரும்␢ புலம்பமாட்டாரா?␢ நாடு முழுவதும்␢ நைல்நதியின் வெள்ளமெனச்␢ சுழற்றியெறியப்படாதா?␢ எகிப்து நாட்டின் நைல்நதிபோல்␢ அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?⁾9 ⁽தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:␢ “அந்நாளில் நண்பகலில்␢ கதிரவனை மறையச்செய்து␢ பட்டப்பகலில் உலகை␢ இருள் சூழச் செய்வேன்.⁾10 ⁽உங்கள் திருவிழாக்களை␢ அழுகையாகவும்,␢ பாடல்களை எல்லாம்␢ புலம்பலாகவும் மாற்றுவேன்;␢ எல்லாரும் இடுப்பில்␢ சாக்கு உடை உடுத்தவும்,␢ அனைவரின் தலையும்␢ மழிக்கப்படவும் செய்வேன்,␢ ஒரே பிள்ளையைப்␢ பறிகொடுத்தோர் புலம்புவதுபோல␢ நீங்களும் புலம்புமாறு செய்வேன்;␢ அதன் முடிவு␢ கசப்புமிக்க நாளாய் இருக்கும்.”⁾11 ⁽தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:␢ “இதோ! நாள்கள் வரப்போகின்றன!␢ அப்போது நாட்டினுள்␢ பஞ்சத்தை அனுப்புவேன்;␢ அது உணவு கிடைக்காத பஞ்சமோ,␢ நீரில்லாத வறட்சியோ அன்று;␢ ஆண்டவரின் வாக்கு கிடைக்காத␢ பஞ்சமே அது.⁾12 ⁽ஒரு கடல் முதல் மறு கடல்வரை,␢ வடதிசை முதல் கீழ்த்திசைவரை␢ தேடிச் சென்று␢ அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து␢ ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள்.␢ ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.⁾13 ⁽அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும்␢ இளைஞர்களும்␢ நீர் வேட்கையால்␢ சோர்ந்து வீழ்வார்கள்.⁾14 ⁽சமாரியா நாட்டு␢ அஸ்மா தெய்வத்தின் பெயரால்␢ ஆணையிட்டு,␢ “தாண் நாடே!␢ வாழும் உன் கடவுள்மேல்␢ ஆணை!” எனவும்␢ “பெயேர்செபாவில் வாழும்␢ காவலர்மேல் ஆணை!” எனவும்␢ சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்;␢ மீண்டும் எழவே மாட்டார்கள்.⁾