1அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.Then Darius the king made a decree, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.
2மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:And there was found at Achmetha, in the palace that is in the province of the Medes, a roll, and therein was a record thus written:
3ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.In the first year of Cyrus the king the same Cyrus the king made a decree concerning the house of God at Jerusalem, Let the house be builded, the place where they offered sacrifices, and let the foundations thereof be strongly laid; the height thereof threescore cubits, and the breadth thereof threescore cubits;
4அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.With three rows of great stones, and a row of new timber: and let the expenses be given out of the king's house:
5அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.And also let the golden and silver vessels of the house of God, which Nebuchadnezzar took forth out of the temple which is at Jerusalem, and brought unto Babylon, be restored, and brought again unto the temple which is at Jerusalem, every one to his place, and place them in the house of God.
6அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.Now therefore, Tatnai, governor beyond the river, Shetharboznai, and your companions the Apharsachites, which are beyond the river, be ye far from thence:
7தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.Let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in his place.
8தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.Moreover I make a decree what ye shall do to the elders of these Jews for the building of this house of God: that of the king's goods, even of the tribute beyond the river, forthwith expenses be given unto these men, that they be not hindered.
9பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests which are at Jerusalem, let it be given them day by day without fail:
10எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.That they may offer sacrifices of sweet savours unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.
11பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.Also I have made a decree, that whosoever shall alter this word, let timber be pulled down from his house, and being set up, let him be hanged thereon; and let his house be made a dunghill for this.
12ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.And the God that hath caused his name to dwell there destroy all kings and people, that shall put to their hand to alter and to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with speed.
13அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.Then Tatnai, governor on this side the river, Shetharboznai, and their companions, according to that which Darius the king had sent, so they did speedily.
14அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.And the elders of the Jews builded, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
15ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.And this house was finished on the third day of the month Adar, which was in the sixth year of the reign of Darius the king.
16அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.And the children of Israel, the priests, and the Levites, and the rest of the children of the captivity, kept the dedication of this house of God with joy.
17தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,And offered at the dedication of this house of God an hundred bullocks, two hundred rams, four hundred lambs; and for a sin offering for all Israel, twelve he goats, according to the number of the tribes of Israel.
18மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.And they set the priests in their divisions, and the Levites in their courses, for the service of God, which is at Jerusalem; as it is written in the book of Moses.
19சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.And the children of the captivity kept the passover upon the fourteenth day of the first month.
20ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.For the priests and the Levites were purified together, all of them were pure, and killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.
21அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,And the children of Israel, which were come again out of captivity, and all such as had separated themselves unto them from the filthiness of the heathen of the land, to seek the LORD God of Israel, did eat,
22புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.And kept the feast of unleavened bread seven days with joy: for the LORD had made them joyful, and turned the heart of the king of Assyria unto them, to strengthen their hands in the work of the house of God, the God of Israel.
1Appoluthu raajaavaakiya thariyu itta kattalaiyinpatiyae paapilon kajaanaavilulla thasthira araiyaich sothiththaarkal.Then Darius the king made a decree, and search was made in the house of the rolls, where the treasures were laid up in Babylon.
2Maethiya seemaiyilirukkira akmaethaa pattanaththin aramanaiyilae oru surul akappattathu; athilae eluthiyiruntha viparamaavathu:And there was found at Achmetha, in the palace that is in the province of the Medes, a roll, and therein was a record thus written:
3Raajaavaakiya koraesin muthalaam varushaththil, koraes raajaa erusalaemiliruntha thaevaalayaththaikkuriththup pirappiththa uththaravu ennavental: thaevaalayamaanathu paliseluththappattuvantha sthaanaththilae kattappadakkadavathu; athin asthipaarangal palamaayiruppathaaka; athu araுpathu mula uyaramum, araுpathu mula akalamumaayirukkavaenndum.In the first year of Cyrus the king the same Cyrus the king made a decree concerning the house of God at Jerusalem, Let the house be builded, the place where they offered sacrifices, and let the foundations thereof be strongly laid; the height thereof threescore cubits, and the breadth thereof threescore cubits;
4Athu moontu varisai perungarkalaalum, oru machchu varisai puthu uththirangalaalum kattappadakkadavathu; atharkuch sellum selavu raajaavin aramanaiyilirunthu kodukkappaduvathaaka.With three rows of great stones, and a row of new timber: and let the expenses be given out of the king's house:
5Antiyum naepukaathnaechchaாr erusalaemiliruntha aalayaththilirunthu eduththu, paapilonukkuk konnduvantha thaevanutaiya aalayaththukkaduththapon vellip pannimuttukal erusalaemilulla thaevaalayamaakiya thangal sthaanaththirkup poych serumpatikkuth thirumpak kodukkappadakkadavathu; avaikalai thaevanutaiya aalayaththukkuk konndupokakkadavarkal entu eluthiyirunthathu.And also let the golden and silver vessels of the house of God, which Nebuchadnezzar took forth out of the temple which is at Jerusalem, and brought unto Babylon, be restored, and brought again unto the temple which is at Jerusalem, every one to his place, and place them in the house of God.
6Appoluthu thariyuraajaa eluthiyanuppinathaavathu: ippoluthum, nathikku appuraththilirukkira thaesaathipathiyaakiya thathnaayum seththaarposnaayumaakiya neengalum, nathikku appuraththilirukkira apparsaakiyaraana ungal vakaiyaraa yaavarum avvidaththaivittu vilakiyirungal.Now therefore, Tatnai, governor beyond the river, Shetharboznai, and your companions the Apharsachites, which are beyond the river, be ye far from thence:
7Thaevanutaiya aalayaththinvaelaiyai avarkal seyyattum, yootharutaiya athipathiyum, yootharin moopparum, thaevanutaiya aalayaththai athin sthaanaththilae kattakkadavarkal.Let the work of this house of God alone; let the governor of the Jews and the elders of the Jews build this house of God in his place.
8Thaevanutaiya aalayaththai yootharin mooppar kattum vishayaththil neengal avarkalukkuch seyyaththakkathaay, nammaal unndaana kattalai ennavental, antha manitharukkuth thatai unndaakaathapatikku, nathikku appuraththil vaangappadum pakuthiyaakiya raajaavin thiraviyaththilae avarkalukkuth thaamathamillaamal sellum selavu kodukkavaenndum.Moreover I make a decree what ye shall do to the elders of these Jews for the building of this house of God: that of the king's goods, even of the tribute beyond the river, forthwith expenses be given unto these men, that they be not hindered.
9Paralokaththin thaevanukkuch sarvaanga thakanapalikalaiyidath thaevaiyaana ilangaalaikal, aattukkadaakkal, aattukkuttikal, kothumai, uppu, thiraatcharasam, ennnney muthalaanavai thinanthinam avarkal sorpati thaalchchiyillaamal kodukkappadakkadavathu.And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests which are at Jerusalem, let it be given them day by day without fail:
10Erusalaemilirukkira aasaariyarkal paralokaththin thaevanukkuch sukantha vaasanaiyaana palikalaich seluththi, raajaavukkum avar kumaararukkum theerkkaayusunndaaka mantadumpatikku ippatich seyyappaduvathaaka.That they may offer sacrifices of sweet savours unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.
11Pinnum nammaal pirakkum kattalaiyennavental: entha manithanaavathu inthak kattalaiyai maattinaal, avan veettilirunthu oru uththiram neengi naattappattu, avan athil thookkippodappadavum, athinimiththaaka avanutaiya veedu kuppaimaedaakkappadavungadavathu.Also I have made a decree, that whosoever shall alter this word, let timber be pulled down from his house, and being set up, let him be hanged thereon; and let his house be made a dunghill for this.
12Aakaiyaal ithai maattavum, erusalaemilulla thaevanutaiya aalayaththaik kedukkavum, thangal kaiyai neettappokira sakala raajaakkalaiyum sakala janangalaiyum thammutaiya naamaththai angae vilangappannnnina Dhevan nirmoolamaakkakkadavar; thariyuvaakiya naam inthak kattalaiyaik koduththom; ithinpati jaakkirathaiyaaych seyyappadakkadavathu entu eluthiyanuppinaan.And the God that hath caused his name to dwell there destroy all kings and people, that shall put to their hand to alter and to destroy this house of God which is at Jerusalem. I Darius have made a decree; let it be done with speed.
13Appoluthu nathikku ippuraththilirukkira thaesaathipathiyaakiya thathnaayum, seththaarposnaayum, avarkal vakaiyaraavum, thariyuraajaa kattalaiyittapirakaaram jaakkirathaiyaaych seythaarkal.Then Tatnai, governor on this side the river, Shetharboznai, and their companions, according to that which Darius the king had sent, so they did speedily.
14Appatiyae yootharin mooppar kattinaarkal; theerkkatharisiyaakiya aakaayum iththovin kumaaranaakiya sakariyaavum theerkkatharisanam sollivanthapatiyinaal avarkalutaiya kaariyam kaikootivanthathu; avarkal isravaelin thaevanutaiya kattalaippatiyaeyum, koraes, thariyu, persiyaavin raajaavaakiya arthasashdaa enpavarkalutaiya kattalaippatiyaeyum athaikkatti mutiththaarkal.And the elders of the Jews builded, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they builded, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
15Raajaavaakiya thariyu arasaalukira aaraam varusham aathaar ennum maatham moontanthaethiyilae antha aalayam katti mutinthathu.And this house was finished on the third day of the month Adar, which was in the sixth year of the reign of Darius the king.
16Appoluthu Israel puththirarum, aasaariyarum, laeviyarum, siraiyiruppilirunthu vantha mattavarkalum thaevanutaiya aalayap pirathishtaiyaich santhoshamaayk konndaatinaarkal.And the children of Israel, the priests, and the Levites, and the rest of the children of the captivity, kept the dedication of this house of God with joy.
17Thaevanutaiya aalayaththin pirathishtaikkaaka nooraு kaalaikalaiyum, irunooraு aattukkadaakkalaiyum, naanooraு aattukkuttilaiyum, Israel koththirangalutaiya ilakkaththinpatiyae, Israel anaiththin paavanivaaranapalikkaakap panniranndu vellaattukkadaakkalaiyum paliyittu,And offered at the dedication of this house of God an hundred bullocks, two hundred rams, four hundred lambs; and for a sin offering for all Israel, twelve he goats, according to the number of the tribes of Israel.
18Mosesyin pusthakaththil eluthiyirukkirapatiyae, avarkal erusalaemilulla thaevanutaiya aaraathanaikkentu aasaariyarai avarkal vakuppukalinpatiyum, laeviyarai avarkalmurai varisaikalinpatiyum niraுththinaarkal.And they set the priests in their divisions, and the Levites in their courses, for the service of God, which is at Jerusalem; as it is written in the book of Moses.
19Siraiyiruppilirunthu vanthavarkal muthalaam maatham pathinaalaanthaethiyilae paskaavaiyum aasariththaarkal.And the children of the captivity kept the passover upon the fourteenth day of the first month.
20Aasaariyarum laeviyarum orumanappattuth thangalaich suththampannnnikkonndathinaal, ellaarum suththamaayirunthu, siraiyiruppilirunthu vanthavarkal ellaarukkaakavum, aasaariyaraana thangal sakothararukkaakavum thangalukkaakavum paskaavin aattukkuttikalai atiththaarkal.For the priests and the Levites were purified together, all of them were pure, and killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.
21Appatiyae siraiyiruppilirunthu thirumpivantha Israel puththirarum, isravaelin thaevanaakiya Karththar naadumpati, pooloka jaathikalin asuththaththai vittu, avarkalanntaiyilae serntha anaivarum athaip pusiththu,And the children of Israel, which were come again out of captivity, and all such as had separated themselves unto them from the filthiness of the heathen of the land, to seek the LORD God of Israel, did eat,
22Pulippillaatha appappanntikaiyai aelunaalaakach santhoshaththudanae aasariththaarkal; Karththar avarkalai makilchchiyaakki, avarkal kaikalai isravaelin Dhevan ennum thaevanutaiya aalayaththin vaelaiyilae palappaduththaththakkathaay aseeriyarutaiya raajaavin iruthayaththai avarkal patchaththil saarnthirukkappannnninaar.And kept the feast of unleavened bread seven days with joy: for the LORD had made them joyful, and turned the heart of the king of Assyria unto them, to strengthen their hands in the work of the house of God, the God of Israel.