1பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.
2மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.And the hand of Midian prevailed against Israel: and because of the Midianites the children of Israel made them the dens which are in the mountains, and caves, and strong holds.
3இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;And so it was, when Israel had sown, that the Midianites came up, and the Amalekites, and the children of the east, even they came up against them;
4அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.And they encamped against them, and destroyed the increase of the earth, till thou come unto Gaza, and left no sustenance for Israel, neither sheep, nor ox, nor ass.
5அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.For they came up with their cattle and their tents, and they came as grasshoppers for multitude; for both they and their camels were without number: and they entered into the land to destroy it.
6இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.And Israel was greatly impoverished because of the Midianites; and the children of Israel cried unto the LORD.
7இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,And it came to pass, when the children of Israel cried unto the LORD because of the Midianites,
8கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,That the LORD sent a prophet unto the children of Israel, which said unto them, Thus saith the LORD God of Israel, I brought you up from Egypt, and brought you forth out of the house of bondage;
9எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,And I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all that oppressed you, and drave them out from before you, and gave you their land;
10நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.And I said unto you, I am the LORD your God; fear not the gods of the Amorites, in whose land ye dwell: but ye have not obeyed my voice.
11அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.And there came an angel of the LORD, and sat under an oak which was in Ophrah, that pertained unto Joash the Abiezrite: and his son Gideon threshed wheat by the winepress, to hide it from the Midianites.
12கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.And the angel of the LORD appeared unto him, and said unto him, The LORD is with thee, thou mighty man of valor.
13அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.And Gideon said unto him, Oh my Lord, if the LORD be with us, why then is all this befallen us? and where be all his miracles which our fathers told us of, saying, Did not the LORD bring us up from Egypt? but now the LORD hath forsaken us, and delivered us into the hands of the Midianites.
14அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?
15அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.And he said unto him, Oh my Lord, wherewith shall I save Israel? behold, my family is poor in Manasseh, and I am the least in my father's house.
16அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.And the LORD said unto him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.
17அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.And he said unto him, If now I have found grace in thy sight, then show me a sign that thou talkest with me.
18நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.
19உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of flour: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out unto him under the oak, and presented it.
20அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.And the angel of God said unto him, Take the flesh and the unleavened cakes, and lay them upon this rock, and pour out the broth. And he did so.
21அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.Then the angel of the LORD put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there rose up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes. Then the angel of the LORD departed out of his sight.
22அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.
23அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.And the LORD said unto him, Peace be unto thee; fear not: thou shalt not die.
24அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.Then Gideon built an altar there unto the LORD, and called it Jehovahshalom: unto this day it is yet in Ophrah of the Abiezrites.
25அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,And it came to pass the same night, that the LORD said unto him, Take thy father's young bullock, even the second bullock of seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the grove that is by it:
26இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.And build an altar unto the LORD thy God upon the top of this rock, in the ordered place, and take the second bullock, and offer a burnt sacrifice with the wood of the grove which thou shalt cut down.
27அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.Then Gideon took ten men of his servants, and did as the LORD had said unto him: and so it was, because he feared his father's household, and the men of the city, that he could not do it by day, that he did it by night.
28அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was cast down, and the grove was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.
29ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.
30அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.Then the men of the city said unto Joash, Bring out thy son, that he may die: because he hath cast down the altar of Baal, and because he hath cut down the grove that was by it.
31யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.And Joash said unto all that stood against him, Will ye plead for Baal? will ye save him? he that will plead for him, let him be put to death whilst it is yet morning: if he be a god, let him plead for himself, because one hath cast down his altar.
32தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.
33மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.Then all the Midianites and the Amalekites and the children of the east were gathered together, and went over, and pitched in the valley of Jezreel.
34அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,But the Spirit of the LORD came upon Gideon, and he blew a trumpet; and Abiezer was gathered after him.
35மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின் செல்லும்படி செய்து, அசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.And he sent messengers throughout all Manasseh; who also was gathered after him: and he sent messengers unto Asher, and unto Zebulun, and unto Naphtali; and they came up to meet them.
36அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,And Gideon said unto God, If thou wilt save Israel by mine hand, as thou hast said,
37இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.Behold, I will put a fleece of wool in the floor; and if the dew be on the fleece only, and it be dry upon all the earth beside, then shall I know that thou wilt save Israel by mine hand, as thou hast said.
38அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப்பிழிந்தான்.And it was so: for he rose up early on the morrow, and thrust the fleece together, and wringed the dew out of the fleece, a bowl full of water.
39அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.And Gideon said unto God, Let not thine anger be hot against me, and I will speak but this once: let me prove, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
40அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.And God did so that night: for it was dry upon the fleece only, and there was dew on all the ground.
1Pinnum Israel puththirar karththarin paarvaikkup pollaappaanathaich seythaarkal; appoluthu Karththar avarkalai aelu varusham meethiyaaniyarin kaiyil oppukkoduththaar.And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.
2Meethiyaaniyarin kai isravaelin maelpalaththukkonndapatiyaal, Israel puththirar meethiyaaniyar nimiththam thangalukku malaikalilulla kepikalaiyum kukaikalaiyum arannaana sthalangalaiyum ataikkalangalaakkikkonndaarkal.And the hand of Midian prevailed against Israel: and because of the Midianites the children of Israel made them the dens which are in the mountains, and caves, and strong holds.
3Isravaelar vithai vithaiththirukkum pothu, meethiyaaniyarum amalaekkiyarum kilakkaththip puththirarum avarkalukku virothamaay elumpi vanthu;And so it was, when Israel had sown, that the Midianites came up, and the Amalekites, and the children of the east, even they came up against them;
4Avarkalukku ethirae paalayamirangi, kaasaavin ellaimattum nilaththin vilaichchalaik keduththu, isravaelilae aakaaraththaiyaakilum, aadumaadukal kaluthaikalaiyaakilum vaikkaathae povaarkal.And they encamped against them, and destroyed the increase of the earth, till thou come unto Gaza, and left no sustenance for Israel, neither sheep, nor ox, nor ass.
5Avarkal thangal mirukajeevankalodum, thangal koodaarangalodum, vettukkilikalaippol thiralaay varuvaarkal; avarkalum avarkal ottakangalum ennnnimutiyaathathaayirukkum; inthappirakaaramaaka thaesaththaik keduththuvida athilae varuvaarkal.For they came up with their cattle and their tents, and they came as grasshoppers for multitude; for both they and their camels were without number: and they entered into the land to destroy it.
6Ippati meethiyaaniyaraalae isravaelar mikavum siraுmaippattarkal; appoluthu Israel puththirar karththarai Nnokki muraiyittarkal.And Israel was greatly impoverished because of the Midianites; and the children of Israel cried unto the LORD.
7Israel puththirar meethiyaaniyar nimiththam karththarai Nnokki muraiyittapothu,And it came to pass, when the children of Israel cried unto the LORD because of the Midianites,
8Karththar oru theerkkatharisiyai avarkalidaththirku anuppinaar; avan avarkalai Nnokki: isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental: naan ungalai ekipthilirunthu varavum, atimaiththana veettilirunthu purappadavum seythu,That the LORD sent a prophet unto the children of Israel, which said unto them, Thus saith the LORD God of Israel, I brought you up from Egypt, and brought you forth out of the house of bondage;
9Ekipthiyar kaiyinintum, ungalai odukkina yaavarutaiya kaiyinintum ungalai iratchiththu, avarkalai ungalukku munpaakath thuraththi, avarkal thaesaththai ungalukkuk koduththu,And I delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all that oppressed you, and drave them out from before you, and gave you their land;
10Naan ungal thaevanaakiya Karththar entum, neengal kutiyirukkum avarkal thaesaththilulla emoΰிyarutaiί thaevarΕlukkup payappadaathirungal entum, ungalukkuch sonnaen; neengalo en sollaik kaelaathaeponeerkal enkiraar entu sonnaan.And I said unto you, I am the LORD your God; fear not the gods of the Amorites, in whose land ye dwell: but ye have not obeyed my voice.
11Atharkuppinpu karththarutaiya thoothanaanavar vanthu, apiyaesriyanaana yovaasin ooraakiya opraavilirukkum oru karvaalimaraththingeel utkaarnthaar; appoluthu avanutaiya kumaaran kithiyon kothumaiyai meethiyaaniyarin kaikkuth thappuvikkiratharkaaka, aalaikkuch sameepamaay athaip poratiththaan.And there came an angel of the LORD, and sat under an oak which was in Ophrah, that pertained unto Joash the Abiezrite: and his son Gideon threshed wheat by the winepress, to hide it from the Midianites.
12Karththarutaiya thoothanaanavar avanukkuth tharisanamaaki: paraakkiramasaaliyae Karththar unnotae irukkiraar entar.And the angel of the LORD appeared unto him, and said unto him, The LORD is with thee, thou mighty man of valor.
13Appoluthu kithiyon avarai Nnokki: aa en aanndavanae, Karththar engalotae irunthaal, ivaiyellaam engalukku naeriduvaanaen? Karththar engalai ekipthilirunthu konnduvaravillaiyaa entu engal pithaakkal engalukku vivariththuchchaொnna avarutaiya arputhangalellaam engae? Ippoluthu Karththar engalaik kaivittu, meethiyaaniyar kaiyil engalai oppukkoduththaarae entan.And Gideon said unto him, Oh my Lord, if the LORD be with us, why then is all this befallen us? and where be all his miracles which our fathers told us of, saying, Did not the LORD bring us up from Egypt? but now the LORD hath forsaken us, and delivered us into the hands of the Midianites.
14Appoluthu Karththar avanai Nnokkippaarththu: unakku irukkira inthap palaththotae po; nee isravaelai meethiyaaniyarin kaikku neengalaakki ratchippaay; unnai anuppukiravar naan allavaa entar.And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?
15Atharku avan: aa en aanndavarae, naan isravaelai ethinaalae ratchippaen; itho, manaaseyil en kudumpam mikavum eliyathu; en thakappan veettil naan ellaarilum siriyavan entan.And he said unto him, Oh my Lord, wherewith shall I save Israel? behold, my family is poor in Manasseh, and I am the least in my father's house.
16Atharkuk Karththar: naan unnotaekooda iruppaen; orae manushanai muriya atippathupola nee meethiyaaniyarai muriya atippaay entar.And the LORD said unto him, Surely I will be with thee, and thou shalt smite the Midianites as one man.
17Appoluthu avan: ummutaiya kannkalil ippoluthum enakkuththayai kitaiththathaanaal ennotae paesukiravar thaevareerthaan entu enakku oru ataiyaalaththaik kaattavaenndum.And he said unto him, If now I have found grace in thy sight, then show me a sign that thou talkest with me.
18Naan ummidaththirku en kaannikkaiyaik konnduvanthu, umakku munpaaka vaikkumalavum, ivvidam vittuppokaathiruppeeraaka entan; atharku avar: nee thirumpivarumattum naan iruppaen entar.Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.
19Udanae kithiyon ullae poy, oru vellaattukkuttiyaiyum oru marakkaal maavilae pulippillaath appangalaiyum aayaththappaduththi, iraichchiyai oru kootaiyil vaiththu, aanaththai oru kinnnaththil vaarththu, athai veliyae karvaalimaraththin geelirukkira avaridaththil konnduvanthu vaiththaan.And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of flour: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out unto him under the oak, and presented it.
20Appoluthu thaevanutaiya thoothanaanavar avanai Nnokki: nee iraichchiyaiyum pulippillaatha appangalaiyum eduththu, inthak karpaaraiyin mael vaiththu aanaththai oottaு entar; avan appatiyae seythaan.And the angel of God said unto him, Take the flesh and the unleavened cakes, and lay them upon this rock, and pour out the broth. And he did so.
21Appoluthu karththarutaiya thoothan thamathu kaiyiliruntha kolin nuniyai neetti, iraichchiyaiyum pulippillaatha appangalaiyum thottar; appoluthu akkini karpaaraiyilirunthu elumpi, iraichchiyaiyum pulippillaatha appangalaiyum patchiththathu; karththarin thoothanovental, avan kannkalukku marainthu ponaar.Then the angel of the LORD put forth the end of the staff that was in his hand, and touched the flesh and the unleavened cakes; and there rose up fire out of the rock, and consumed the flesh and the unleavened cakes. Then the angel of the LORD departed out of his sight.
22Appoluthu kithiyon, avar karththarutaiya thoothan entu kanndu: aiyo, karththaraana aanndavarae, naan karththarutaiya thoothanai mukamukamaayk kanntaenae entan.And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.
23Atharku Karththar: unakkuch samaathaanam; payappadaathae, nee saavathillai entu sonnaar.And the LORD said unto him, Peace be unto thee; fear not: thou shalt not die.
24Angae kithiyon karththarukku oru palipeedaththaik katti, atharku yekovaa shaalom entu paerittan; athu innaalvaraikkum apiyaesriyarin ooraakiya opraavil irukkirathu.Then Gideon built an altar there unto the LORD, and called it Jehovahshalom: unto this day it is yet in Ophrah of the Abiezrites.
25Antu raaththiriyilae Karththar avanai Nnokki: nee un thakappanukku irukkira kaalaikalil aelu vayathaana iranndaam kaalaiyaik konndupoy, un thakappanukku irukkira paakaalin palipeedaththaith thakarththu, athin arukaeyirukkira thoppai vettippottu,And it came to pass the same night, that the LORD said unto him, Take thy father's young bullock, even the second bullock of seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the grove that is by it:
26Inthak karpaarai uchchiyilae paangaana oru idaththil un thaevanaakiya karththarukku oru palipeedaththaik katti, antha iranndaam kaalaiyaik konndu vanthu, athai nee vettippotta thoppinutaiya kattaை virakukalin mael sarvaanga thakanamaakap paliyidakkadavaay entar.And build an altar unto the LORD thy God upon the top of this rock, in the ordered place, and take the second bullock, and offer a burnt sacrifice with the wood of the grove which thou shalt cut down.
27Appoluthu kithiyon, than vaelaiyaatkalil paththuppaeraich serththu, Karththar thanakkuch sonnapatiyae seythaan; avan than thakappan kudumpaththaarukkum antha oor manusharukkum payappattapatiyinaalae, athaip pakalilae seyyaamal, iravilae seythaan.Then Gideon took ten men of his servants, and did as the LORD had said unto him: and so it was, because he feared his father's household, and the men of the city, that he could not do it by day, that he did it by night.
28Antha oor manushar kaalamae elunthirunthapothu, itho, paakaalin palipeedam thakarkkappattathum, athin arukaeyiruntha thoppu vettippodappattathum, kattappattiruntha palipeedaththin mael antha iranndaam kaalai paliyidappattathumaayirukka avarkal kanndu;And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was cast down, and the grove was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.
29Oruvaraiyoruvar Nnokki: inthak kaariyaththaich seythavan yaar entarkal; kaettu visaarikkirapothu, yovaasin makan kithiyon ithaich seythaan entarkal.And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.
30Appoluthu ooraar yovaasai Nnokki: un makanai veliyae konndu vaa; avan paakaalin palipeedaththaith thakarththu, athin arukaeyiruntha thoppai vettippottan, avan saakavaenndum entarkal.Then the men of the city said unto Joash, Bring out thy son, that he may die: because he hath cast down the altar of Baal, and because he hath cut down the grove that was by it.
31Yovaas thanakku virothamaaka nirkira anaivaraiyum paarththu: neengalaa paakaalukkaaka valakkaaduveerkal? Neengalaa athai iratchippeerkal? Atharkaaka valakkaadukiravan intu kaalaiyilae thaanae saakakkadavan; athu thaevanaanaal than palipeedaththaith thakarththathinimiththam, athu thaanae thanakkaaka valakkaadattum entan.And Joash said unto all that stood against him, Will ye plead for Baal? will ye save him? he that will plead for him, let him be put to death whilst it is yet morning: if he be a god, let him plead for himself, because one hath cast down his altar.
32Than palipeedaththaith thakarththathinimiththam paakaal avanotae valakkaadattum entu solli, annaalilae avanukku yerupaakaal entu paeridappattathu.Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.
33Meethiyaaniyarum amalaekkiyarum kilakkaththip puththirar yaavarum aekamaaykkooti, aattaைk kadanthuvanthu, yesrayael pallaththaakkilae paalayamiranginaarkal.Then all the Midianites and the Amalekites and the children of the east were gathered together, and went over, and pitched in the valley of Jezreel.
34Appoluthu karththarutaiya Aaviyaanavar kithiyonmael iranginaar; avan ekkaalam oothi, apiyaesriyaraik kooppittu, thanakkup pinsellumpati seythu,But the Spirit of the LORD came upon Gideon, and he blew a trumpet; and Abiezer was gathered after him.
35Manaase naadengum sthaanaapathikalai anuppi, avarkalaiyum kooppittu, thanakkup pin sellumpati seythu, aser, sepulon, napthali naadukalilum aatkalai anuppinaan; avarkalum avanukku ethirkonndu vanthaarkal.And he sent messengers throughout all Manasseh; who also was gathered after him: and he sent messengers unto Asher, and unto Zebulun, and unto Naphtali; and they came up to meet them.
36Appoluthu kithiyon thaevanai Nnokki: thaevareer sonnapati en kaiyinaalae isravaelai iratchikkavaenndumaanaal,And Gideon said unto God, If thou wilt save Israel by mine hand, as thou hast said,
37Itho, naan mayirulla oru tholaik kalaththilae podukiraேn; pani tholinmael maaththiram peythu, poomiyellaam kaaynthirunthaal, appoluthu thaevareer sonnapati isravaelai en kaiyinaal iratchippeer entu athinaalae arivaen entan.Behold, I will put a fleece of wool in the floor; and if the dew be on the fleece only, and it be dry upon all the earth beside, then shall I know that thou wilt save Israel by mine hand, as thou hast said.
38Appatiyae aayittaு. Avan maraுnaal kaalamae elunthirunthu, tholaikkasakki, athiliruntha panineerai oru kinnnam niraiyappilinthaan.And it was so: for he rose up early on the morrow, and thrust the fleece together, and wringed the dew out of the fleece, a bowl full of water.
39Appoluthu kithiyon thaevanai Nnokki: naan innum oruvisaimaaththiram paesukiraேn, umathu kopam en mael moolaathiruppathaaka; tholinaalae naan innum oraevisai sothanaipannnattum; tholmaaththiram kaaynthirukkavum poomiyengum pani peythirukkavum kattalaiyidum entan.And Gideon said unto God, Let not thine anger be hot against me, and I will speak but this once: let me prove, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
40Appatiyae Dhevan antu raaththiri seythaar; tholmaaththiram kaaynthirunthu, poomiyengum pani peythirunthathu.And God did so that night: for it was dry upon the fleece only, and there was dew on all the ground.