சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து நமக்காக அந்தத் தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.
இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.
And I commanded | וָֽאֲצַוֶּ֥ה | wāʾăṣawwe | va-uh-tsa-WEH |
time at | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
that | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
you | הַהִ֑וא | hahiw | ha-HEEV |
all | אֵ֥ת | ʾēt | ate |
things the | כָּל | kāl | kahl |
which | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
ye should do. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
תַּֽעֲשֽׂוּן׃ | taʿăśûn | TA-uh-SOON |