இதோ, உனக்கு விரோதமாக, நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,
உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| And I will make | וְנָתַתִּ֤י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| Rabbah | רַבָּה֙ | rabbāh | ra-BA |
| a stable | לִנְוֵ֣ה | linwē | leen-VAY |
| for camels, | גְמַלִּ֔ים | gĕmallîm | ɡeh-ma-LEEM |
| and the Ammonites | וְאֶת | wĕʾet | veh-ET |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| a couchingplace | עַמּ֖וֹן | ʿammôn | AH-mone |
| for flocks: | לְמִרְבַּץ | lĕmirbaṣ | leh-meer-BAHTS |
| and ye shall know | צֹ֑אן | ṣōn | tsone |
| that | וִֽידַעְתֶּ֖ם | wîdaʿtem | vee-da-TEM |
| I | כִּֽי | kî | kee |
| am the Lord. | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |