ஓசியா 12

fullscreen1 எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.

fullscreen2 யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

fullscreen3 அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.

fullscreen4 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.

fullscreen5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.

fullscreen6 இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.

fullscreen7 அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.

fullscreen8 எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.

fullscreen9 உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன்.

fullscreen10 அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக்கொண்டு உவமைகளால் பேசினேன்.

fullscreen11 கீலχயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளிலிருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.

fullscreen12 யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

fullscreen13 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.

1 Ephraim feedeth on wind, and followeth after the east wind: he daily increaseth lies and desolation; and they do make a covenant with the Assyrians, and oil is carried into Egypt.

2 The Lord hath also a controversy with Judah, and will punish Jacob according to his ways; according to his doings will he recompense him.

3 He took his brother by the heel in the womb, and by his strength he had power with God:

4 Yea, he had power over the angel, and prevailed: he wept, and made supplication unto him: he found him in Beth-el, and there he spake with us;

5 Even the Lord God of hosts; the Lord is his memorial.

6 Therefore turn thou to thy God: keep mercy and judgment, and wait on thy God continually.

7 He is a merchant, the balances of deceit are in his hand: he loveth to oppress.

8 And Ephraim said, Yet I am become rich, I have found me out substance: in all my labours they shall find none iniquity in me that were sin.

9 And I that am the Lord thy God from the land of Egypt will yet make thee to dwell in tabernacles, as in the days of the solemn feast.

10 I have also spoken by the prophets, and I have multiplied visions, and used similitudes, by the ministry of the prophets.

11 Is there iniquity in Gilead? surely they are vanity: they sacrifice bullocks in Gilgal; yea, their altars are as heaps in the furrows of the fields.

12 And Jacob fled into the country of Syria, and Israel served for a wife, and for a wife he kept sheep.

13 And by a prophet the Lord brought Israel out of Egypt, and by a prophet was he preserved.