யோசுவா 19

fullscreen10 மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

fullscreen11 அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

fullscreen12 சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

fullscreen13 அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.

fullscreen14 அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

fullscreen15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

fullscreen16 செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

10 And the third lot came up for the children of Zebulun according to their families: and the border of their inheritance was unto Sarid:

11 And their border went up toward the sea, and Maralah, and reached to Dabbasheth, and reached to the river that is before Jokneam;

12 And turned from Sarid eastward toward the sunrising unto the border of Chisloth-tabor, and then goeth out to Daberath, and goeth up to Japhia,

13 And from thence passeth on along on the east to Gittah-hepher, to Ittah-kazin, and goeth out to Remmon-methoar to Neah;

14 And the border compasseth it on the north side to Hannathon: and the outgoings thereof are in the valley of Jiphthah-el:

15 And Kattath, and Nahallal, and Shimron, and Idalah, and Bethlehem: twelve cities with their villages.

16 This is the inheritance of the children of Zebulun according to their families, these cities with their villages.