🏠  Lyrics  Chords  Bible 

Golgathavin Sikarathilae PPT - கொல்கதாவின் சிகரத்திலே

கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா
இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா
விம்மி விம்மி அழுகிறேன்
என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன்
- கொல்கதாவின்
ஆணிகள் அறைந்தவனை கூட
நீர் அப்பா மன்னியும் என்றீர் !
விம்மி விம்மி அழுகிறேன்
என்னை வெறுமையாய் உணர்கிறேன்
அப்பா என் அப்பா
இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா
- கொல்கதாவின்
ரோஜாவின் தலையில் முள் முடியா?
ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?
விம்மி விம்மி அழுகிறேன்
அந்த வேதனையை உணர்கிறேன்
அப்பா என் அப்பா
வார்த்தை வரவில்லை அப்பா
- கொல்கதாவின்
நீர் தரைக்கு வந்து அறைய பட்ட வானமா?
ஜீவ தண்ணீருக்கே அன்று கடும் தாகமா?
விம்மி விம்மி அழுகிறேன்
உம் தாகம் கொண்டு தவிக்கிறேன்
அப்பா என் அப்பா
கண்ணீரில் மிதக்கின்றேன் அப்பா
- கொல்கதாவின்
உலகத்தின் ஜீவ பலி நீர் தானே!
உம் உதிரமும் பாய்ந்து வரும் யோர்தானே!
ஏங்கி ஏங்கி அழுகின்றேன்
இந்த ஏழை உம்மை தொழுகிறேன்
அப்பா என் அப்பா
எனக்காக பலியான அப்பா


Golgathavin Sikarathilae PowerPoint



Golgathavin Sikarathilae - கொல்கதாவின் சிகரத்திலே Lyrics

Golgathavin Sikarathilae PPT

Download Golgathavin Sikarathilae Tamil PPT