Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து

இயேசுவை வாழ்த்திப் போற்றும்

பல்லவி

மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே.

அனுபல்லவி

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து

சரணங்கள்

1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு;
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு;
விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு;
வீரமாய் மறை கூறும் சத்தியமே,
நயமே, ஜெயமே-திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
தேறுவாய், களி கூருவாய் தினம் – மகிழ்ந்து

2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது;
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே,
நண்ணியே உன்னியே,-மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி,
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக – மகிழ்ந்து

Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து Lyrics in English

Yesuvai vaalththip pottaுm

Pallavi

Makilnthu, pukalnthu, mikappanninthu, thuthiththaesuvai
Vaalththip pottaுm, en aaththumaavae.

Anupallavi

Thakuntha kaalaththil kristhun akanthaippavam theerththunaith
Thamathu kirupaich samukanthanil serththathaal – makilnthu

Saranangal

1. Sinthai makilnthu saththiya maarkkaththil odu;
Thinan thinam jepaththil thaevaaviyaik koodu;
Vinthaiyaay meynjnjaana pathangalaip paadu;
Vinn ulakaththin nithya vaalvinaith thaedu;
Veeramaay marai kooraுm saththiyamae,
Nayamae, jeyamae-thivviya
Saaramaay veku thaaramaayp paarththu,
Thaeraுvaay, kali kooruvaay thinam – makilnthu

2. Avaraip pin senta pinpaasai aakaathu;
Aniththiya ulakaththin paasam aakaathu;
Pavam mikum maamisa ichchaை aakaathu;
Parisuththa neri vittup piriva thaakaathu;
Panthayap porulaich sinthaiyil ennnniyae,
Nannnniyae unniyae,-makaa
Vinthaik kiristharasan unthan siraththin mooti,
Santhoshamaaych sootta munthiyodu, mika – makilnthu

PowerPoint Presentation Slides for the song Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து PPT
Magilnthu Pugalnthu PPT

மகிழ்ந்து ஆகாது வாழ்த்திப் போற்றும் தினம் உலகத்தின் இயேசுவை பல்லவி புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை ஆத்துமாவே அனுபல்லவி தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத் தமது தமிழ்