இயேசுவை வாழ்த்திப் போற்றும்
பல்லவி
மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே.
அனுபல்லவி
தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து
சரணங்கள்
1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு;
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு;
விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு;
வீரமாய் மறை கூறும் சத்தியமே,
நயமே, ஜெயமே-திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
தேறுவாய், களி கூருவாய் தினம் – மகிழ்ந்து
2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது;
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே,
நண்ணியே உன்னியே,-மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி,
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக – மகிழ்ந்து
Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து Lyrics in English
Yesuvai vaalththip pottaுm pallavi makilnthu, pukalnthu, mikappanninthu, thuthiththaesuvai vaalththip pottaுm, en aaththumaavae. Anupallavi thakuntha kaalaththil kristhun akanthaippavam theerththunaith thamathu kirupaich samukanthanil serththathaal – makilnthu saranangal 1. Sinthai makilnthu saththiya maarkkaththil odu; thinan thinam jepaththil thaevaaviyaik koodu; vinthaiyaay meynjnjaana pathangalaip paadu; vinn ulakaththin nithya vaalvinaith thaedu; veeramaay marai kooraுm saththiyamae, nayamae, jeyamae-thivviya saaramaay veku thaaramaayp paarththu, thaeraுvaay, kali kooruvaay thinam – makilnthu 2. Avaraip pin senta pinpaasai aakaathu; aniththiya ulakaththin paasam aakaathu; pavam mikum maamisa ichchaை aakaathu; Parisuththa neri vittup piriva thaakaathu; panthayap porulaich sinthaiyil ennnniyae, nannnniyae unniyae,-makaa vinthaik kiristharasan unthan siraththin mooti, santhoshamaaych sootta munthiyodu, mika – makilnthu
PowerPoint Presentation Slides for the song Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்ந்து புகழ்ந்து PPT
Magilnthu Pugalnthu PPT

