பல்லவி
உனக்கு நிகரானவர் யார் ? – இந்த
உலக முழுவதிலுமே .
அனுபல்லவி
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
சரணங்கள்
1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு
2. கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி – உனக்கு
Unakku Nikaraanavar Yaar – உனக்கு நிகரானவர் யார் Lyrics in English
Pallavi
Unakku nikaraanavar yaar ? – intha
Ulaka muluvathilumae .
Anupallavi
Thanakku thaanae nikaraam thaathai thiruch suthanae
Manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku
Saranangal
1 .thaay makalukkaaka saavaalo – koodap pirantha
Thamaiyan thampikkaay maayvaano?
Naeyan naeyarkkaay saavaano? Thanathuyirai
Naer virothikkaay eevaano?
Nee im mannnulakil neesarkatkaaka vanthu
Kaayum manamadavarkkaaka mariththaay suvaami .- unakku
2. Kanthai urintherinthanai – neethiyin aatai
Kanakka uduththuviththanai,
Manthaiyil serththuvaiththanai , kadum vinaikal
Maatti enthanaik kaaththanai;
Kantha malarp paathanae ,kanaka rathna maeruvae ,
Sinthai uvanthu vantha thiyaaka raasanae , suvaami – unakku
PowerPoint Presentation Slides for the song Unakku Nikaraanavar Yaar – உனக்கு நிகரானவர் யார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakku Nikaraanavar Yaar – உனக்கு நிகரானவர் யார் PPT
Unakku Nikaraanavar Yaar PPT

