Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கு நிகரானவர் யார்

பல்லவி

உனக்கு நிகரானவர் யார் ? – இந்த
உலக முழுவதிலுமே .

அனுபல்லவி

தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

சரணங்கள்

1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு

2. கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி – உனக்கு

Unakku Nikaraanavar Yaar – உனக்கு நிகரானவர் யார் Lyrics in English

Pallavi unakku nikaraanavar yaar ? – intha ulaka muluvathilumae . Anupallavi thanakku thaanae nikaraam thaathai thiruch suthanae manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku saranangal 1 .thaay makalukkaaka saavaalo – koodap pirantha thamaiyan thampikkaay maayvaano? Naeyan naeyarkkaay saavaano? Thanathuyirai naer virothikkaay eevaano? Nee im mannnulakil neesarkatkaaka vanthu kaayum manamadavarkkaaka mariththaay suvaami .- unakku 2. Kanthai urintherinthanai – neethiyin aatai kanakka uduththuviththanai, manthaiyil serththuvaiththanai , kadum vinaikal maatti enthanaik kaaththanai; kantha malarp paathanae ,kanaka rathna maeruvae , sinthai uvanthu vantha thiyaaka raasanae , suvaami – unakku

PowerPoint Presentation Slides for the song Unakku Nikaraanavar Yaar – உனக்கு நிகரானவர் யார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கு நிகரானவர் யார் PPT
Unakku Nikaraanavar Yaar PPT

உனக்கு சுவாமி பல்லவி நிகரானவர் உலக முழுவதிலுமே அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக சரணங்கள் தாய் English