Vaana Ratchiyam Vanthatho - வானராச்சியம் வந்ததோ
வானராச்சியம் வந்ததோ
பல்லவி
வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!
அனுபல்லவி
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்.- வான
சரணங்கள்
1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான
2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- வான
3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.- வான
4.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.- வான
5.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.- வான
Vaana Ratchiyam Vanthatho - வானராச்சியம் வந்ததோ Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vaana Ratchiyam Vanthatho - வானராச்சியம் வந்ததோ
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaana Ratchiyam Vanthatho - வானராச்சியம் வந்ததோ PPT Vaana Ratchiyam Vanthatho PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum