1 அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து ‘ஆட்டு வாயிலைக்’ கட்டி அர்ப்பணம் செய்தனர்; அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்; ‘மேயா காவல்மாடம்’ வரையும் ‘அன்னியேல் காவல்மாடம்’ வரையும் அர்ப்பணம் செய்தனர்.⒫2 அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.3 பின் அசனாவாவின் வழிமரபினர் ‘மீன் வாயிலைக்’ கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.⒫4 அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.⒫5 தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.6 பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் ‘பழைய வாயிலைப்’ பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.7 யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன் - மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.8 பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் ‘பெரிய மதில்’ வரை புதுப்பித்தார்கள்.9 எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.10 இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.11 ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், ‘சூளைக்காவல் மாடத்தையும்’ பழுது பார்த்தனர்.12 எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.13 ஆனூனும், சானோவாகில் வாழ்ந்தவர்களும், ‘பள்ளத்தாக்கு வாயிலைப்’ பழுதுபார்த்தனர்; அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். ‘குப்பைமேட்டு வாயில்’ வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.14 பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, ‘குப்பைமேட்டு வாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.⒫15 மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லூம், ‘ஊருணிவாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த ‘சேலா குளத்துச்’ சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.16 அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.17 அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.18 பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.19 மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.20 அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.21 அவருக்கு அடுத்து, ஆக்கோனின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.22 அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.23 இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.24 அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.25 மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்26 ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த ‘தண்ணீர் வாயிலின்’ எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.27 அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.28 ‘குதிரை வாயில்’ முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.29 அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.30 அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.31 அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.32 மூலையிலிருந்த மேல் மாடிக்கும் ‘ஆட்டு வாயிலுக்கும்’ இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.