நீதிமொழிகள் 6

fullscreen6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

fullscreen7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

fullscreen8 கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

fullscreen9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

fullscreen10 இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

fullscreen11 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

6 Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:

7 Which having no guide, overseer, or ruler,

8 Provideth her meat in the summer, and gathereth her food in the harvest.

9 How long wilt thou sleep, O sluggard? when wilt thou arise out of thy sleep?

10 Yet a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:

11 So shall thy poverty come as one that travelleth, and thy want as an armed man.