Strong's Hebrew Concordance
Strong's Hebrew #1032
| Base Word | |
| בֵּית חוֹרוֹן | |
| Short Definition | Beth-Choron, the name of two adjoining places in Palestine |
| Long Definition |
two towns in Ephraim Upper Beth-horon—town on the mountains of Ephraim, Lower Beth-horon—town located 800 feet (245 m) lower than Upper Beth-horon |
| Derivation | from H1004 and H2356; house of hollowness |
| International Phonetic Alphabet | bei̯t̪ ħoˈron̪ |
| IPA mod | bei̯t χo̞wˈʁo̞wn |
| Syllable | bêt ḥôrôn |
| Diction | bate hoh-RONE |
| Diction Mod | bate hoh-RONE |
| Usage | Beth-horon |
| Part of speech | n-pr-loc |
Bible Verses (14 occurrences)
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லுூசுக்கு வந்து, லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.
யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
Occurences : 14