1 Chronicles 6:31

கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,

1 Chronicles 6:32

சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக் கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.

1 Chronicles 6:33

கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.

1 Chronicles 6:34

இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.

1 Chronicles 6:35

இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.

1 Chronicles 6:36

இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

1 Chronicles 6:37

இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.

1 Chronicles 6:38

இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.

1 Chronicles 6:39

இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.

1 Chronicles 6:40

இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.

1 Chronicles 6:41

இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.

1 Chronicles 6:42

இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.

1 Chronicles 6:43

இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

1 Chronicles 6:44

மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்கின் குமாரன்.

1 Chronicles 6:45

இவன் அபியாவின் குமாரன் இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.

1 Chronicles 6:46

இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.

1 Chronicles 6:47

இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

1 Chronicles 6:48

அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள்.

1 Chronicles 6:49

ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.

1 Chronicles 6:50

ஆரோனின் குமாரரில் எலெயாசர் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.

1 Chronicles 6:51

இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி, இவன் குமாரன் செராகியா.

1 Chronicles 6:52

இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.

1 Chronicles 6:53

இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.