Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 14:16 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 14 Jeremiah 14:16

எரேமியா 14:16
அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் மக்களும், எருசலேமின் வீதிகளில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அடக்கம்செய்வாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அத்தீர்க்கதரிசிகள் பேசுகிற ஜனங்களும் வீதிகளில் எறியப்படுவார்கள். அந்த ஜனங்கள் பசியாலும், பகைவரின் வாளாலும் மரிப்பார்கள். அந்த ஜனங்களையும் அவர்களது மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும் புதைக்க எவரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்த தீமையைக்கொண்டே நான் அவர்களைத் தண்டிப்பேன்.

Thiru Viviliam
அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.

Jeremiah 14:15Jeremiah 14Jeremiah 14:17

King James Version (KJV)
And the people to whom they prophesy shall be cast out in the streets of Jerusalem because of the famine and the sword; and they shall have none to bury them, them, their wives, nor their sons, nor their daughters: for I will pour their wickedness upon them.

American Standard Version (ASV)
And the people to whom they prophesy shall be cast out in the streets of Jerusalem because of the famine and the sword; and they shall have none to bury them-them, their wives, nor their sons, nor their daughters: for I will pour their wickedness upon them.

Bible in Basic English (BBE)
And the people to whom they are prophets will be pushed out dead into the streets of Jerusalem, because there is no food, and because of the sword; and they will have no one to put their bodies into the earth, them or their wives or their sons or their daughters: for I will let loose their evil-doing on them.

Darby English Bible (DBY)
and the people to whom they prophesy shall be cast out in the streets of Jerusalem, because of the famine and the sword; and there shall be none to bury them, them, their wives, and their sons, and their daughters; and I will pour their wickedness upon them.

World English Bible (WEB)
The people to whom they prophesy shall be cast out in the streets of Jerusalem because of the famine and the sword; and they shall have none to bury them-them, their wives, nor their sons, nor their daughters: for I will pour their wickedness on them.

Young’s Literal Translation (YLT)
And the people to whom they are prophesying, Are cast into out-places of Jerusalem, Because of the famine, and of the sword, And they have none burying them, Them, their wives, and their sons, and their daughters, And I have poured out upon them this evil.

எரேமியா Jeremiah 14:16
அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And the people to whom they prophesy shall be cast out in the streets of Jerusalem because of the famine and the sword; and they shall have none to bury them, them, their wives, nor their sons, nor their daughters: for I will pour their wickedness upon them.

וְהָעָ֣םwĕhāʿāmveh-ha-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵ֣מָּהhēmmâHAY-ma
נִבְּאִ֣יםnibbĕʾîmnee-beh-EEM
לָהֶ֡םlāhemla-HEM
יִֽהְי֣וּyihĕyûyee-heh-YOO
מֻשְׁלָכִים֩mušlākîmmoosh-la-HEEM
בְּחֻצ֨וֹתbĕḥuṣôtbeh-hoo-TSOTE
יְרוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
מִפְּנֵ֣י׀mippĕnêmee-peh-NAY
הָרָעָ֣בhārāʿābha-ra-AV
וְהַחֶ֗רֶבwĕhaḥerebveh-ha-HEH-rev
וְאֵ֤יןwĕʾênveh-ANE
מְקַבֵּר֙mĕqabbērmeh-ka-BARE
לָהֵ֔מָּהlāhēmmâla-HAY-ma
הֵ֣מָּהhēmmâHAY-ma
נְשֵׁיהֶ֔םnĕšêhemneh-shay-HEM
וּבְנֵיהֶ֖םûbĕnêhemoo-veh-nay-HEM
וּבְנֹֽתֵיהֶ֑םûbĕnōtêhemoo-veh-noh-tay-HEM
וְשָׁפַכְתִּ֥יwĕšāpaktîveh-sha-fahk-TEE
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
אֶתʾetet
רָעָתָֽם׃rāʿātāmra-ah-TAHM

Cross Reference

எரேமியா 15:2
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

எரேமியா 7:33
இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

நீதிமொழிகள் 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

சங்கீதம் 79:2
உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும் உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

எரேமியா 18:21
ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

எரேமியா 16:4
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

எரேமியா 13:22
இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.

வெளிப்படுத்தின விசேஷம் 16:1
அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

மத்தேயு 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

எரேமியா 19:6
ஆகையால் இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று செޠβ்லப்படும்.

எரேமியா 9:22
மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

எரேமியா 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?

எரேமியா 4:18
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

எரேமியா 2:17
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?

ஏசாயா 9:16
இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசήடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.


Tags அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும் எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து அவர்களும் அவர்கள் மனைவிகளும் அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள் அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 14:16 in Tamil Concordance Jeremiah 14:16 in Tamil Interlinear Jeremiah 14:16 in Tamil Image