Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 30:13 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 30 Ezekiel 30:13

எசேக்கியேல் 30:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “நான் எகிப்திலுள்ள விக்கிரகங்களை அழிப்பேன். நான் நோப்பின் சிலைகளை வெளியே அப்புறப்படுத்துவேன். எகிப்து நாட்டில் இனிமேல் ஒரு தலைவனும் இருக்கமாட்டான். நான் எகிப்து நாட்டில் அச்சத்தை வைப்பேன்.

Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ நான் சிலைகளை அழிப்பேன்;␢ நோபில் இருக்கும் உருவங்களுக்கு␢ முடிவுகட்டுவேன்;␢ எகிப்தில் இனி மன்னன் இரான்;␢ நாடு முழுவதும்␢ அச்சத்தைப் பரப்புவேன்.⁾

Title
எகிப்தின் விக்கிரகங்கள் அழிக்கப்படும்

Ezekiel 30:12Ezekiel 30Ezekiel 30:14

King James Version (KJV)
Thus saith the Lord GOD; I will also destroy the idols, and I will cause their images to cease out of Noph; and there shall be no more a prince of the land of Egypt: and I will put a fear in the land of Egypt.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: I will also destroy the idols, and I will cause the images to cease from Memphis; and there shall be no more a prince from the land of Egypt: and I will put a fear in the land of Egypt.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: In addition to this, I will give up the images to destruction and put an end to the false gods in Noph; never again will there be a ruler in the land of Egypt: and I will put a fear in the land of Egypt.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: I will also destroy the idols, and I will cause the images to cease out of Noph; and there shall be no more a prince out of the land of Egypt; and I will put fear in the land of Egypt.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: I will also destroy the idols, and I will cause the images to cease from Memphis; and there shall be no more a prince from the land of Egypt: and I will put a fear in the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: And — I have destroyed idols, And caused vain things to cease from Noph, And a prince of the land of Egypt there is no more, And I give fear in the land of Egypt.

எசேக்கியேல் Ezekiel 30:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
Thus saith the Lord GOD; I will also destroy the idols, and I will cause their images to cease out of Noph; and there shall be no more a prince of the land of Egypt: and I will put a fear in the land of Egypt.

כֹּֽהkoh
אָמַ֞רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֗הyĕhwiyeh-VEE
וְהַאֲבַדְתִּ֨יwĕhaʾăbadtîveh-ha-uh-vahd-TEE
גִלּוּלִ֜יםgillûlîmɡee-loo-LEEM
וְהִשְׁבַּתִּ֤יwĕhišbattîveh-heesh-ba-TEE
אֱלִילִים֙ʾĕlîlîmay-lee-LEEM
מִנֹּ֔ףminnōpmee-NOFE
וְנָשִׂ֥יאwĕnāśîʾveh-na-SEE
מֵאֶֽרֶץmēʾereṣmay-EH-rets
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
לֹ֣אlōʾloh
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
ע֑וֹדʿôdode
וְנָתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE
יִרְאָ֖הyirʾâyeer-AH
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

Cross Reference

சகரியா 10:11
இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.

எரேமியா 46:14
ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.

எரேமியா 2:16
நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.

சகரியா 13:2
அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

செப்பனியா 2:11
கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.

ஓசியா 9:6
இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.

எசேக்கியேல் 29:14
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

எரேமியா 46:25
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,

எரேமியா 46:5
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 43:12
எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

யாத்திராகமம் 12:12
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நான் நரகலான விக்கிரகங்களை அழித்து நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன் இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான் நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி
Ezekiel 30:13 in Tamil Concordance Ezekiel 30:13 in Tamil Interlinear Ezekiel 30:13 in Tamil Image