Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 11:31 in Tamil

Home Bible Daniel Daniel 11 Daniel 11:31

தானியேல் 11:31
ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.

Tamil Easy Reading Version
வடபகுதி அரசன் தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள்.

Thiru Viviliam
அவனுடைய படை வீரர்கள் வந்து திருக்கோவிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்திவிட்டு, ‘நடுங்கவைக்கும் தீட்டை’ அங்கே அமைப்பார்கள்.

Daniel 11:30Daniel 11Daniel 11:32

King James Version (KJV)
And arms shall stand on his part, and they shall pollute the sanctuary of strength, and shall take away the daily sacrifice, and they shall place the abomination that maketh desolate.

American Standard Version (ASV)
And forces shall stand on his part, and they shall profane the sanctuary, even the fortress, and shall take away the continual `burnt-offering’, and they shall set up the abomination that maketh desolate.

Bible in Basic English (BBE)
And armies sent by him will take up their position and they will make unclean the holy place, even the strong place, and take away the regular burned offering and put in its place an unclean thing causing fear.

Darby English Bible (DBY)
And forces shall stand on his part, and they shall profane the sanctuary, the fortress, and shall take away the continual [sacrifice], and they shall place the abomination that maketh desolate.

World English Bible (WEB)
Forces shall stand on his part, and they shall profane the sanctuary, even the fortress, and shall take away the continual [burnt offering], and they shall set up the abomination that makes desolate.

Young’s Literal Translation (YLT)
And strong ones out of him stand up, and have polluted the sanctuary, the stronghold, and have turned aside the continual `sacrifice’, and appointed the desolating abomination.

தானியேல் Daniel 11:31
ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.
And arms shall stand on his part, and they shall pollute the sanctuary of strength, and shall take away the daily sacrifice, and they shall place the abomination that maketh desolate.

וּזְרֹעִ֖יםûzĕrōʿîmoo-zeh-roh-EEM
מִמֶּ֣נּוּmimmennûmee-MEH-noo
יַעֲמֹ֑דוּyaʿămōdûya-uh-MOH-doo
וְחִלְּל֞וּwĕḥillĕlûveh-hee-leh-LOO
הַמִּקְדָּ֤שׁhammiqdāšha-meek-DAHSH
הַמָּעוֹז֙hammāʿôzha-ma-OZE
וְהֵסִ֣ירוּwĕhēsîrûveh-hay-SEE-roo
הַתָּמִ֔ידhattāmîdha-ta-MEED
וְנָתְנ֖וּwĕnotnûveh-note-NOO
הַשִּׁקּ֥וּץhaššiqqûṣha-SHEE-koots
מְשֹׁמֵֽם׃mĕšōmēmmeh-shoh-MAME

Cross Reference

தானியேல் 12:11
அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.

தானியேல் 9:27
ஆவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

மாற்கு 13:14
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

தானியேல் 8:11
அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:12
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:40
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:

லுூக்கா 21:20
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

தானியேல் 8:26
சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

தானியேல் 8:24
அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.

எசேக்கியேல் 24:21
நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

எசேக்கியேல் 9:7
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.

எசேக்கியேல் 7:20
அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டு பண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,

புலம்பல் 2:7
ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

புலம்பல் 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.


Tags ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி அன்றாடபலியை நீக்கி பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்
Daniel 11:31 in Tamil Concordance Daniel 11:31 in Tamil Interlinear Daniel 11:31 in Tamil Image