Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 18:6 in Tamil

Home Bible Psalm Psalm 18 Psalm 18:6

சங்கீதம் 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

Tamil Indian Revised Version
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது.

Tamil Easy Reading Version
நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன். ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன். தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார். என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.

Thiru Viviliam
⁽என் நெருக்கடிவேளையில்␢ நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;␢ என் கடவுளை நோக்கிக் கதறினேன்;␢ தமது கோவிலினின்று␢ அவர் என் குரலைக் கேட்டார்;␢ என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.⁾

Psalm 18:5Psalm 18Psalm 18:7

King James Version (KJV)
In my distress I called upon the LORD, and cried unto my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears.

American Standard Version (ASV)
In my distress I called upon Jehovah, And cried unto my God: He heard my voice out of his temple, And my cry before him came into his ears.

Bible in Basic English (BBE)
In my trouble my voice went up to the Lord, and my cry to my God: my voice came to his hearing in his holy Temple, and my prayer came before him, even into his ears.

Darby English Bible (DBY)
In my distress I called upon Jehovah, and I cried out to my God; he heard my voice out of his temple, and my cry came before him, into his ears.

Webster’s Bible (WBT)
The sorrows of hell encompassed me: the snares of death seized me.

World English Bible (WEB)
In my distress I called on Yahweh, And cried to my God. He heard my voice out of his temple, My cry before him came into his ears.

Young’s Literal Translation (YLT)
In mine adversity I call Jehovah, And unto my God I cry. He heareth from His temple my voice, And My cry before Him cometh into His ears.

சங்கீதம் Psalm 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
In my distress I called upon the LORD, and cried unto my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears.

בַּצַּרbaṣṣarba-TSAHR
לִ֤י׀lee
אֶֽקְרָ֣אʾeqĕrāʾeh-keh-RA
יְהוָה֮yĕhwāhyeh-VA
וְאֶלwĕʾelveh-EL
אֱלֹהַ֪יʾĕlōhayay-loh-HAI
אֲשַׁ֫וֵּ֥עַʾăšawwēaʿuh-SHA-WAY-ah
יִשְׁמַ֣עyišmaʿyeesh-MA
מֵהֵיכָל֣וֹmēhêkālômay-hay-ha-LOH
קוֹלִ֑יqôlîkoh-LEE
וְ֝שַׁוְעָתִ֗יwĕšawʿātîVEH-shahv-ah-TEE
לְפָנָ֤יו׀lĕpānāywleh-fa-NAV
תָּב֬וֹאtābôʾta-VOH
בְאָזְנָֽיו׃bĕʾoznāywveh-oze-NAIV

Cross Reference

சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

2 சாமுவேல் 22:7
எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:5
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.

ஆபகூக் 2:20
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.

சங்கீதம் 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

சங்கீதம் 120:1
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதம் 18:3
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.

சங்கீதம் 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

2 நாளாகமம் 30:27
லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

1 இராஜாக்கள் 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

யாத்திராகமம் 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

வெளிப்படுத்தின விசேஷம் 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

மாற்கு 14:36
அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.


Tags எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு என் தேவனை நோக்கி அபயமிட்டேன் தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார் என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவிகளில் ஏறிற்று
Psalm 18:6 in Tamil Concordance Psalm 18:6 in Tamil Interlinear Psalm 18:6 in Tamil Image