1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.So they brought the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt sacrifices and peace offerings before God.
2தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,And when David had made an end of offering the burnt offerings and the peace offerings, he blessed the people in the name of the LORD.
3புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.And he dealt to every one of Israel, both man and woman, to every one a loaf of bread, and a good piece of flesh, and a flagon of wine.
4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.And he appointed certain of the Levites to minister before the ark of the LORD, and to record, and to thank and praise the LORD God of Israel:
5அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,Asaph the chief, and next to him Zechariah, Jeiel, and Shemiramoth, and Jehiel, and Mattithiah, and Eliab, and Benaiah, and Obededom: and Jeiel with psalteries and with harps; but Asaph made a sound with cymbals;
6பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.Benaiah also and Jahaziel the priests with trumpets continually before the ark of the covenant of God.
7அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:Then on that day David delivered first this psalm to thank the LORD into the hand of Asaph and his brethren.
8கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.Give thanks unto the LORD, call upon his name, make known his deeds among the people.
9அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.Sing unto him, sing psalms unto him, talk ye of all his wondrous works.
10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.Glory ye in his holy name: let the heart of them rejoice that seek the LORD.
11கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.Seek the LORD and his strength, seek his face continually.
12அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!Remember his marvelous works that he hath done, his wonders, and the judgments of his mouth;
13அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.O ye seed of Israel his servant, ye children of Jacob, his chosen ones.
14அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.He is the LORD our God; his judgments are in all the earth.
15ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,Be ye mindful always of his covenant; the word which he commanded to a thousand generations;
16அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.Even of the covenant which he made with Abraham, and of his oath unto Isaac;
17அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:And hath confirmed the same to Jacob for a law, and to Israel for an everlasting covenant,
18உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;
19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.When ye were but few, even a few, and strangers in it.
20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.And when they went from nation to nation, and from one kingdom to another people;
21அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
22நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.Saying, Touch not mine anointed, and do my prophets no harm.
23பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.Sing unto the LORD, all the earth; show forth from day to day his salvation.
24ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.Declare his glory among the heathen; his marvelous works among all nations.
25கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.For great is the LORD, and greatly to be praised: he also is to be feared above all gods.
26சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.For all the gods of the people are idols: but the LORD made the heavens.
27மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.Glory and honor are in his presence; strength and gladness are in his place.
28ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.Give unto the LORD, ye kindred of the people, give unto the LORD glory and strength.
29கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.Give unto the LORD the glory due unto his name: bring an offering, and come before him: worship the LORD in the beauty of holiness.
30பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
31வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.
32சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.Let the sea roar, and the fulness thereof: let the fields rejoice, and all that is therein.
33அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.Then shall the trees of the wood sing out at the presence of the LORD, because he cometh to judge the earth.
34கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.O give thanks unto the LORD; for he is good; for his mercy endureth for ever.
35எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.
36இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.Blessed be the LORD God of Israel for ever and ever. And all the people said, Amen, and praised the LORD.
37பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,So he left there before the ark of the covenant of the LORD Asaph and his brethren, to minister before the ark continually, as every day's work required:
38எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.And Obededom with their brethren, threescore and eight; Obededom also the son of Jeduthun and Hosah to be porters:
39கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,
40அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,To offer burnt offerings unto the LORD upon the altar of the burnt offering continually morning and evening, and to do according to all that is written in the law of the LORD, which he commanded Israel;
41இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,And with them Heman and Jeduthun, and the rest that were chosen, who were expressed by name, to give thanks to the LORD, because his mercy endureth for ever;
42பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.And with them Heman and Jeduthun with trumpets and cymbals for those that should make a sound, and with musical instruments of God. And the sons of Jeduthun were porters.
43பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.And all the people departed every man to his house: and David returned to bless his house.
1Avarkal thaevanutaiya pettiyai ullae konnduvanthapothu, David atharkup potta koodaaraththin naduvae avarkal athai vaiththu, thaevanutaiya sannithiyil sarvaanga thakanapalikalaiyum samaathaanapalikalaiyum seluththinaarkal.So they brought the ark of God, and set it in the midst of the tent that David had pitched for it: and they offered burnt sacrifices and peace offerings before God.
2David sarvaanga thakanapalikalaiyum samaathaanapalikalaiyum seluththith theernthapinpu, avan janaththaik karththarutaiya naamaththilae aasirvathiththu,And when David had made an end of offering the burnt offerings and the peace offerings, he blessed the people in the name of the LORD.
3Purushar thodangi sthireekalmattum, isravaelaraakiya anaivarukkum avaravarukku ovvoru appaththaiyum ovvoru iraichchith thunntaiyum, ovvorupati thiraatcharasaththaiyum pangittuk koduththaan.And he dealt to every one of Israel, both man and woman, to every one a loaf of bread, and a good piece of flesh, and a flagon of wine.
4Isravaelin thaevanaakiya karththaraip pirasthaapampannnnith thuthiththup pukalukiratharku karththarutaiya pettikku munpaakach sevikkaththakka laeviyaril silarai niyamiththaan.And he appointed certain of the Levites to minister before the ark of the LORD, and to record, and to thank and praise the LORD God of Israel:
5Avarkalil aasaap thalaivanum, sakariyaa avanukku iranndaavathumaayirunthaan; aeyel, semiramoth, yekiyael, maththiththiyaa, eliyaap, penaayaa, opaethaethom, aeyel enpavarkal thampuru suramanndalam ennum geethavaaththiyangalai vaasikkavum, aasaap kaiththaalangalaik kottavum,Asaph the chief, and next to him Zechariah, Jeiel, and Shemiramoth, and Jehiel, and Mattithiah, and Eliab, and Benaiah, and Obededom: and Jeiel with psalteries and with harps; but Asaph made a sound with cymbals;
6Penaayaa, yaakaasiyael ennum aasaariyar eppothum thaevanutaiya udanpatikkaip pettikku munpaakap poorikaikalai oothavum niyamikkappattarkal.Benaiah also and Jahaziel the priests with trumpets continually before the ark of the covenant of God.
7Appati aarampiththa annaalilaethaanae karththarukkuth thuthiyaakap paadumpati David aasaappidaththilum avan sakothararidaththilum koduththa sangaீthamaavathu:Then on that day David delivered first this psalm to thank the LORD into the hand of Asaph and his brethren.
8Karththaraith thuthiththu, avarutaiya naamaththaip pirasthaapamaakkungal; avarutaiya seykaikalai janangalukkullae pirasiththappaduththungal.Give thanks unto the LORD, call upon his name, make known his deeds among the people.
9Avaraip paati, avaraik geerththanampannnni avarutaiya athisayangalaiyellaam thiyaaniththup paesungal.Sing unto him, sing psalms unto him, talk ye of all his wondrous works.
10Avarutaiya Parisuththa naamaththaikkuriththu maenmaipaaraattungal; karththaraith thaedukiravarkalin iruthayam makilvathaaka.Glory ye in his holy name: let the heart of them rejoice that seek the LORD.
11Karththaraiyum avar vallamaiyaiyum naadungal; avar samukaththai niththamum thaedungal.Seek the LORD and his strength, seek his face continually.
12Avarutaiya thaasanaakiya isravaelin santhathiyae! Avaraal therinthukollappattavarkalaakiya yaakkopin puththirarae!Remember his marvelous works that he hath done, his wonders, and the judgments of his mouth;
13Avar seytha athisayangalaiyum arputhangalaiyum, avar vaakkin niyaayaththeerppukalaiyum ninaivukoorungal.O ye seed of Israel his servant, ye children of Jacob, his chosen ones.
14Avarae nammutaiya thaevanaakiya Karththar; avarutaiya niyaayaththeerppukal poomiyengum vilangum.He is the LORD our God; his judgments are in all the earth.
15Aayiranthalaimuraikkentu avar kattalaiyitta vaakkaiyum, aapirakaamotae avar pannnnina udanpatikkaiyaiyum,Be ye mindful always of his covenant; the word which he commanded to a thousand generations;
16Avar eesaakkukku itta aannaiyaiyum ententaikkum ninaiththirungal.Even of the covenant which he made with Abraham, and of his oath unto Isaac;
17Athai yaakkopukkup piramaanamaakavum, isravaelukku niththiya udanpatikkaiyaakavum uraுthippaduththi:And hath confirmed the same to Jacob for a law, and to Israel for an everlasting covenant,
18Ungal suthantharapaakamaaka kaanaan thaesaththai unakkuth tharuvaen entar.Saying, Unto thee will I give the land of Canaan, the lot of your inheritance;
19Akkaalaththil avarkal konjaththokaikkutpatta sorpajanangalum parathaesikalumaayirunthaarkal.When ye were but few, even a few, and strangers in it.
20Avarkal oru janaththai vittu maraு janaththanntaikkum, oru raajyaththai vittu maraு thaesaththaaranntaikkum ponaarkal.And when they went from nation to nation, and from one kingdom to another people;
21Avarkalai yodukkumpati oruvarukkum idangaொdaamal, avarkal nimiththam raajaakkalai katinthukonndu:He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes,
22Naan apishaekampannnninavarkalai neengal thodaamalum, ennutaiya theerkkatharisikalukkuth theenguseyyaamalum irungal entar.Saying, Touch not mine anointed, and do my prophets no harm.
23Poomiyin sakala kutikalae, karththaraippaati, naalukkunaal avarutaiya ratchippaich suviseshamaay ariviyungal.Sing unto the LORD, all the earth; show forth from day to day his salvation.
24Jaathikalukkullum avarutaiya makimaiyaiyum, sakala janangalukkullum avarutaiya athisayangalaiyum vivariththuchchaொllungal.Declare his glory among the heathen; his marvelous works among all nations.
25Karththar periyavarum mikavum thuthikkappadaththakkavarumaayirukkiraar; ellaa thaevarkalilum payappadaththakkavar avarae.For great is the LORD, and greatly to be praised: he also is to be feared above all gods.
26Sakala janangalutaiya thaevarkalum vikkirakangalthaanae; karththaro vaanangalai unndaakkinavar.For all the gods of the people are idols: but the LORD made the heavens.
27Makimaiyum kanamum avar samukaththil irukkirathu; vallamaiyum makilchchiyum avar sthalaththil irukkirathu.Glory and honor are in his presence; strength and gladness are in his place.
28Janangalin vamsangalae, karththarukku makimaiyaiyum vallamaiyaiyum seluththungal; karththarukkae athaich seluththungal.Give unto the LORD, ye kindred of the people, give unto the LORD glory and strength.
29Karththarukku avarutaiya naamaththirkuriya makimaiyaich seluththi, kaannikkaikalaik konnduvanthu, avarutaiya sannithiyil piravaesiyungal; Parisuththa alangaaraththudanae karththaraith tholuthukollungal.Give unto the LORD the glory due unto his name: bring an offering, and come before him: worship the LORD in the beauty of holiness.
30Poolokaththaarae, neengal yaavarum avarukku munpaaka nadungungal; avar poochchakkaraththai asaiyaathapatikku uraுthippaduththukiravar.Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
31Vaanangal makilnthu, poomi poorippathaaka; Karththar raajarikampannnukiraar entu jaathikalukkullae sollappaduvathaaka.Let the heavens be glad, and let the earth rejoice: and let men say among the nations, The LORD reigneth.
32Samuththiramum athin niraivum mulangi, naadum athilulla yaavum kalikooruvathaaka.Let the sea roar, and the fulness thereof: let the fields rejoice, and all that is therein.
33Appoluthu karththarukku munpaakak kaattuvirutchangalum kempeerikkum; avar poomiyai niyaayantheerkka varukiraar.Then shall the trees of the wood sing out at the presence of the LORD, because he cometh to judge the earth.
34Karththaraith thuthiyungal, avar nallavar, avar kirupai entumullathu.O give thanks unto the LORD; for he is good; for his mercy endureth for ever.
35Engal ratchippin thaevanae, naangal umathu Parisuththa naamaththaip potti, ummaith thuthikkirathinaal maenmaipaaraattumpatikku, engalai ratchiththu, engalaich serththukkonndu, jaathikalukku engalai neengalaakkiyarulumentu sollungal.And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.
36Isravaelin thaevanaakiya karththarukku sathaakaalangalilum sthoththiramunndaavathaaka, atharku janangalellaarum Amen entu sollik karththaraith thuthiththaarkal.Blessed be the LORD God of Israel for ever and ever. And all the people said, Amen, and praised the LORD.
37Pinpu pettikku munpaaka niththam antadaka muraiyaaych sevikkumpati, avan angae karththarutaiya udanpatikkaip pettikku munpaaka aasaappaiyum, avan sakothararaiyum, opaethaethomaiyum, avarkalutaiya sakothararaakiya araுpaththettuppaeraiyum vaiththu,So he left there before the ark of the covenant of the LORD Asaph and his brethren, to minister before the ark continually, as every day's work required:
38Ethiththoonin kumaaranaakiya intha opaethaethomaiyum osaavaiyum vaasalkaakkiravarkalaaka vaiththaan.And Obededom with their brethren, threescore and eight; Obededom also the son of Jeduthun and Hosah to be porters:
39Kipiyonilulla maettin maelirukkira karththarutaiya vaasasthalaththirku munpaaka irukkira sarvaanga thakanapalipeedaththinmael sarvaanga thakanangalai niththamum, anthisanthiyil Karththar isravaelukkuk karpiththa niyaayappiramaanaththil eluthiyirukkirapatiyellaam karththarukkuch seluththuvatharkaaka,And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,
40Angae avan aasaariyanaakiya saathokkaiyum, avan sakothararaakiya aasaariyaraiyum vaiththu,To offer burnt offerings unto the LORD upon the altar of the burnt offering continually morning and evening, and to do according to all that is written in the law of the LORD, which he commanded Israel;
41Ivarkalodungaூda aemaanaiyum, ethiththoonaiyum, paerpaeraakak kuriththuth therinthukollappatta mattach silaraiyum karththarutaiya kirupai entumullathu entu avaraith thuthikkavum,And with them Heman and Jeduthun, and the rest that were chosen, who were expressed by name, to give thanks to the LORD, because his mercy endureth for ever;
42Poorikaikalaiyum kaiththaalangalaiyum thaevanaip paadukiratharkuriya geethavaaththiyangalaiyum thonikkachcheyyavum avarkaludan aemaanaiyum ethiththoonaiyum vaiththu, ethiththoonin kumaararai vaasalkaakkiravarkalaakak kattalaiyittan.And with them Heman and Jeduthun with trumpets and cymbals for those that should make a sound, and with musical instruments of God. And the sons of Jeduthun were porters.
43Pinpu janangal ellaarum avaravar thangal veettirkup ponaarkal; Davidm than veettarai aaseervathikkaththirumpinaan.And all the people departed every man to his house: and David returned to bless his house.