1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.Now after the death of Joshua it came to pass, that the children of Israel asked the LORD, saying, Who shall go up for us against the Canaanites first, to fight against them?
2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான்.And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரையும் வெட்டினார்கள்.And Judah went up; and the LORD delivered the Canaanites and the Perizzites into their hand: and they slew of them in Bezek ten thousand men.
5பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.And they found Adonibezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.
6அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.But Adonibezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.
7அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.And Adonibezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered their meat under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.
8யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப்பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டிப், பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.Now the children of Judah had fought against Jerusalem, and had taken it, and smitten it with the edge of the sword, and set the city on fire.
9பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.And afterward the children of Judah went down to fight against the Canaanites, that dwelt in the mountain, and in the south, and in the valley.
10அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjatharba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.
11அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjathsepher:
12அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
13அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.
14அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said unto her, What wilt thou?
15அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.And she said unto him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.
16மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.And the children of the Kenite, Moses' father in law, went up out of the city of palm trees with the children of Judah into the wilderness of Judah, which lieth in the south of Arad; and they went and dwelt among the people.
17யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான், அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம் பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.And Judah went with Simeon his brother, and they slew the Canaanites that inhabited Zephath, and utterly destroyed it. And the name of the city was called Hormah.
18யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.Also Judah took Gaza with the coast thereof, and Askelon with the coast thereof, and Ekron with the coast thereof.
19கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.And the LORD was with Judah; and he drave out the inhabitants of the mountain; but could not drive out the inhabitants of the valley, because they had chariots of iron.
20மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.And they gave Hebron unto Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.
21பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.And the children of Benjamin did not drive out the Jebusites that inhabited Jerusalem; but the Jebusites dwell with the children of Benjamin in Jerusalem unto this day.
22யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.And the house of Joseph, they also went up against Bethel: and the LORD was with them.
23யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லுூஸ் என்று பேர்.And the house of Joseph sent to descry Bethel. (Now the name of the city before was Luz.)
24அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.And the spies saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.
25அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword; but they let go the man and all his family.
26அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லுூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்.And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz: which is the name thereof unto this day.
27மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.Neither did Manasseh drive out the inhabitants of Bethshean and her towns, nor Taanach and her towns, nor the inhabitants of Dor and her towns, nor the inhabitants of Ibleam and her towns, nor the inhabitants of Megiddo and her towns: but the Canaanites would dwell in that land.
28இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.And it came to pass, when Israel was strong, that they put the Canaanites to tribute, and did not utterly drive them out.
29எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.Neither did Ephraim drive out the Canaanites that dwelt in Gezer; but the Canaanites dwelt in Gezer among them.
30செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களானார்கள்.Neither did Zebulun drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.
31ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:
32ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not drive them out.
33நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.Neither did Naphtali drive out the inhabitants of Bethshemesh, nor the inhabitants of Bethanath; but he dwelt among the Canaanites, the inhabitants of the land: nevertheless the inhabitants of Bethshemesh and of Bethanath became tributaries unto them.
34எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.And the Amorites forced the children of Dan into the mountain: for they would not suffer them to come down to the valley:
35எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
36எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.And the coast of the Amorites was from the going up to Akrabbim, from the rock, and upward.
1Yosuvaa mariththapin Israel puththirar karththarai Nnokki: kaanaaniyarai ethirththu yuththampannnumpati, engalil yaar muthalmuthal elunthu purappadavaenndum entu kaettarkal.Now after the death of Joshua it came to pass, that the children of Israel asked the LORD, saying, Who shall go up for us against the Canaanites first, to fight against them?
2Atharkuk Karththar: yoothaa elunthu purappadakkadavan; itho, antha thaesaththai avan kaiyilae oppukkoduththaen entar.And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
3Appoluthu yoothaa than sakotharanaakiya simiyonai Nnokki: naam kaanaaniyarotae yuththampannna nee en suthantharap panguveethaththil ennotaekooda elunthu vaa; un suthantharap pangu veethaththil naanum unnodukooda varuvaen entan; appatiyae simiyon avanotaekooda ponaan.And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.
4Yoothaa elunthuponapothu, Karththar kaanaaniyaraiyum perisiyaraiyum avarkal kaiyilae oppukkoduththaar; avarkal paesekkilae pathinaayirampaeraiyum vettinaarkal.And Judah went up; and the LORD delivered the Canaanites and the Perizzites into their hand: and they slew of them in Bezek ten thousand men.
5Paesekkilae athonipaesekkaik kanndu, avanodu yuththampannnni, kaanaaniyaraiyum perisiyaraiyum vettinaarkal.And they found Adonibezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.
6Athonipaesek otippokaiyil, avanaip pinthodarnthu pitiththu, avan kaikaalkalin peruviralkalaith thariththup pottarkal.But Adonibezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.
7Appoluthu athonipaesek: elupathu raajaakkal, kaikaalkalin peruviralkal tharikkappattavarkalaay, en maejaiyingeel vilunthathaip poraுkkith thintarkal; naan eppatich seythaeno, appatiyae Dhevan enakkum seythu sarikkattinaar entan. Avanai erusalaemukkuk konnduponaarkal; angae avan seththupponaan.And Adonibezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered their meat under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.
8Yoothaavin puththirar erusalaeminmael yuththampannnni, athaippitiththu, athilullavarkalaip pattayak karukkinaal vettip, pattanaththai akkinikku iraiyaakkivittarkal.Now the children of Judah had fought against Jerusalem, and had taken it, and smitten it with the edge of the sword, and set the city on fire.
9Pinpu yoothaavin puththirar malaiththaesaththilaeyum, therkaeyum, pallaththaakkukalilaeyum kutiyirukkira kaanaaniyarodu yuththampannnap purappattupponaarkal.And afterward the children of Judah went down to fight against the Canaanites, that dwelt in the mountain, and in the south, and in the valley.
10Appatiyae yoothaa koththiraththaar epironilae kutiyirukkira kaanaaniyarukku virothamaayp poy, sesaay, ageemaan, thalmaay enpavarkalai vettippottarkal. Murkaalaththil antha epironukku geeriyaath arpaa entu paer.And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjatharba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.
11Angaeyirunthu thepeerin kutikalukku virothamaakap ponaarkal; murkaalaththil thepeerukku geeriyaathseppaer entu paer.And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjathsepher:
12Appothu kaalaep: geeriyaathseppaerai sangaarampannnnip pitikkiravanukku en kumaaraththiyaakiya aksaalai vivaakam pannnnikkoduppaen entan.And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
13Appothu kaalaeputaiya thampiyaakiya kaenaasin kumaaran othniyael athaip pitiththaan; aakaiyaal than kumaaraththiyaakiya aksaalai avanukku vivaakam pannnnikkoduththaan.And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.
14Aval purappadukaiyil, en thakappanidaththil oru vayalveliyaik kaetkavaenndum entu avanidaththil uththaravu pettaுkkonndu, kaluthaiyinmaelirunthu iranginaal; kaalaep avalai Nnokki: unakku enna vaenndum entan.And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said unto her, What wilt thou?
15Appothu aval: enakku oru aaseervaatham tharavaenndum; varatchiyaana nilaththai enakkuth thantheer; neerppaaychchalaana nilangalaiyum enakku tharavaenndum ental; appoluthu kaalaep maerpuraththilum geelppuraththilum avalukku neerppaaychchalaana nilangalaik koduththaan.And she said unto him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.
16Mosesyin maamanaakiya kaeniyanin puththirarum yoothaavin puththirarotaekoodap paereechchamarangalin pattanaththilirunthu aaraaththirkuth therkaeyirukkira yoothaavin vanaantharaththirku vanthu, janangalotae kutiyaerinaarkal.And the children of the Kenite, Moses' father in law, went up out of the city of palm trees with the children of Judah into the wilderness of Judah, which lieth in the south of Arad; and they went and dwelt among the people.
17Yoothaa than sakotharanaakiya simiyonodungaூdap ponaan, avarkal seppaaththil kutiyirukkira kaanaaniyarai muriya atiththu, athaich sangaaram pannnni, anthap pattanaththirku ormaa entu paerittarkal.And Judah went with Simeon his brother, and they slew the Canaanites that inhabited Zephath, and utterly destroyed it. And the name of the city was called Hormah.
18Yoothaa kaasaavaiyum athin ellaiyaiyum, askalonaiyum athin ellaiyaiyum, ekronaiyum athin ellaiyaiyum pitiththaan.Also Judah took Gaza with the coast thereof, and Askelon with the coast thereof, and Ekron with the coast thereof.
19Karththar yoothaavotaekooda irunthathinaal, malaiththaesaththaaraith thuraththivittarkal; pallaththaakkin kutikalukku iruppurathangal irunthapatiyinaal, avarkalaith thuraththa koodaamarpoyittaு.And the LORD was with Judah; and he drave out the inhabitants of the mountain; but could not drive out the inhabitants of the valley, because they had chariots of iron.
20Moses sonnapatiyae, epironaik kaalaepukkuk koduththaarkal; avan athiliruntha aenaakkin moontu kumaararaiyum thuraththivittan.And they gave Hebron unto Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.
21Penyameen puththirar erusalaemilae kutiyiruntha epoosiyaraiyum thuraththividavillai; aakaiyaal epoosiyar innaal mattum penyameen puththirarotaekooda erusalaemil kutiyirukkiraarkal.And the children of Benjamin did not drive out the Jebusites that inhabited Jerusalem; but the Jebusites dwell with the children of Benjamin in Jerusalem unto this day.
22Yoseppin kudumpaththaarum peththaelukku virothamaayp ponaarkal; Karththar avarkalotaekooda irunthaar.And the house of Joseph, they also went up against Bethel: and the LORD was with them.
23Yoseppin puththirar peththaelai vaevupaarkka aatkalai anuppinaarkal; munnae anthap pattanaththirku luூs entu paer.And the house of Joseph sent to descry Bethel. (Now the name of the city before was Luz.)
24Antha vaevukaarar pattanaththilirunthu purappattu varukira oru manushanaik kanndu: pattanaththirkul piravaesikkum valiyai engalukkuk kaannpi, unakkuth thayaiseyvom entarkal.And the spies saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.
25Appatiyae pattanaththirkul piravaesikkum valiyai avarkalukkuk kaannpiththaan; appoluthu avarkal vanthu, pattanaththilullavarkalaip pattayakkarukkinaal vetti, antha manushanaiyum avan kudumpaththaiyum vittuvittarkal.And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword; but they let go the man and all his family.
26Appoluthu antha manushan aeththiyarin thaesaththirkup poy, oru pattanaththaik katti, atharku luூs entu paerittan; athuthaan innaal mattum athin paer.And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz: which is the name thereof unto this day.
27Manaase koththiraththaar pethseyaan pattanaththaaraiyum atharku aduththa oorkalin manusharaiyum, thaanaak pattanaththaaraiyum, atharku aduththa oorkalin manusharaiyum, thorin kutikalaiyum atharku aduththa oorkalin manusharaiyum, ipleyaam pattanaththaaraiyum atharku aduththa oorkalin manusharaiyum, mekithovin kutikalaiyum atharku aduththa oorkalin manusharaiyum thuraththividavillai; kaanaaniyar antha thaesaththilae thaanae kutiyirukkavaenndum entu irunthaarkal.Neither did Manasseh drive out the inhabitants of Bethshean and her towns, nor Taanach and her towns, nor the inhabitants of Dor and her towns, nor the inhabitants of Ibleam and her towns, nor the inhabitants of Megiddo and her towns: but the Canaanites would dwell in that land.
28Isravaelar palaththapothu, kaanaaniyarai muttilum thuraththividaamal pakuthi kattappannnninaarkal.And it came to pass, when Israel was strong, that they put the Canaanites to tribute, and did not utterly drive them out.
29Eppiraayeem koththiraththaar kaeserilae kutiyiruntha kaanaaniyaraiyum thuraththividavillai; aakaiyaal kaanaaniyar kaeseril avarkal naduvae kutiyirunthaarkal.Neither did Ephraim drive out the Canaanites that dwelt in Gezer; but the Canaanites dwelt in Gezer among them.
30Sepulon koththiraththaar kithronin kutikalaiyum, naakalolin kutikalaiyum thuraththividavillai, aakaiyaal kaanaaniyar avarkal naduvae kutiyirunthu, pakuthi kattukiravarkalaanaarkal.Neither did Zebulun drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.
31Aaser koththiraththaar akkovin kutikalaiyum, seethonin kutikalaiyum, aklaap, akseep, elpaa, aappeek, sekop pattanangalin kutikalaiyum thuraththividavillai.Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:
32Aaseriyar thaesaththin kutikalaakiya kaanaaniyarin naduvae kutiyirunthaarkal; avarkalai avarkal thuraththividavillai.But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not drive them out.
33Napthali koththiraththaar pethshimaesin kutikalaiyum peththaanaaththina kutikalaiyum thuraththividaamal, thaesaththin kutikalaakiya kaanaaniyarin naduvae kutiyirunthaarkal; pethshimaes, peththaanaath pattanangalin kutikal avarkalukkup pakuthikattukiravarkalaanaarkal.Neither did Naphtali drive out the inhabitants of Bethshemesh, nor the inhabitants of Bethanath; but he dwelt among the Canaanites, the inhabitants of the land: nevertheless the inhabitants of Bethshemesh and of Bethanath became tributaries unto them.
34Emoriyar thaann puththiraraip pallaththaakkil irangavottamal, malaiththaesaththirkup pokumpati nerukkinaarkal.And the Amorites forced the children of Dan into the mountain: for they would not suffer them to come down to the valley:
35Emoriyar aeraes malaikalilum aayalonilum saalpeemilum kutiyirukkavaenndum entu irunthaarkal; aanaalum yoseppin kudumpaththaarin kai palaththapatiyinaal, avarkalukkup pakuthikattukiravarkalaanaarkal.But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
36Emoriyarin ellai akkaraapeemukkup pokira maeduthodangi atharku appuramum poyittaு.And the coast of the Amorites was from the going up to Akrabbim, from the rock, and upward.