1அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.And all the congregation lifted up their voice, and cried; and the people wept that night.
2இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.And all the children of Israel murmured against Moses and against Aaron: and the whole congregation said unto them, Would God that we had died in the land of Egypt! or would God we had died in this wilderness!
3நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.And wherefore hath the LORD brought us unto this land, to fall by the sword, that our wives and our children should be a prey? were it not better for us to return into Egypt?
4பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.
5அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.Then Moses and Aaron fell on their faces before all the assembly of the congregation of the children of Israel.
6தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,And Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of them that searched the land, rent their clothes:
7இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.And they spake unto all the company of the children of Israel, saying, The land, which we passed through to search it, is an exceeding good land.
8கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.If the LORD delight in us, then he will bring us into this land, and give it us; a land which floweth with milk and honey.
9கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.Only rebel not ye against the LORD, neither fear ye the people of the land; for they are bread for us: their defense is departed from them, and the LORD is with us: fear them not.
10அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.But all the congregation bade stone them with stones. And the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.
11கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?And the LORD said unto Moses, How long will this people provoke me? and how long will it be ere they believe me, for all the signs which I have showed among them?
12நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
13மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.And Moses said unto the LORD, Then the Egyptians shall hear it, (for thou broughtest up this people in thy might from among them;)
14கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
15ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,
16கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.
17ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
18என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.The LORD is long-suffering, and of great mercy, forgiving iniquity and transgression, and by no means clearing the guilty, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation.
19உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.Pardon, I beseech thee, the iniquity of this people according unto the greatness of thy mercy, and as thou hast forgiven this people, from Egypt even until now.
20அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.And the LORD said, I have pardoned according to thy word:
21பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.But as truly as I live, all the earth shall be filled with the glory of the LORD.
22என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,Because all those men which have seen my glory, and my miracles, which I did in Egypt and in the wilderness, and have tempted me now these ten times, and have not hearkened to my voice;
23அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.Surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that provoked me see it:
24என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.But my servant Caleb, because he had another spirit with him, and hath followed me fully, him will I bring into the land whereinto he went; and his seed shall possess it.
25அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.(Now the Amalekites and the Canaanites dwelt in the valley.) Tomorrow turn you, and get you into the wilderness by the way of the Red sea.
26பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
27எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.
28நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
29இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward which have murmured against me.
30எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.Doubtless ye shall not come into the land, concerning which I sware to make you dwell therein, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
31கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.
32உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.But as for you, your carcasses, they shall fall in this wilderness.
33அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.And your children shall wander in the wilderness forty years, and bear your whoredoms, until your carcasses be wasted in the wilderness.
34நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.After the number of the days in which ye searched the land, even forty days, each day for a year, shall ye bear your iniquities, even forty years, and ye shall know my breach of promise.
35கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.I the LORD have said, I will surely do it unto all this evil congregation, that are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.
36அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,And the men, which Moses sent to search the land, who returned, and made all the congregation to murmur against him, by bringing up a slander upon the land,
37சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.
38தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.
39மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.And Moses told these sayings unto all the children of Israel: and the people mourned greatly.
40அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.And they rose up early in the morning, and gat them up into the top of the mountain, saying, Lo, we be here, and will go up unto the place which the LORD hath promised: for we have sinned.
41மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.And Moses said, Wherefore now do ye transgress the commandment of the LORD? but it shall not prosper.
42நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.Go not up, for the LORD is not among you; that ye be not smitten before your enemies.
43அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்.For the Amalekites and the Canaanites are there before you, and ye shall fall by the sword: because ye are turned away from the LORD, therefore the LORD will not be with you.
44ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை.But they presumed to go up unto the hill top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.
45அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.Then the Amalekites came down, and the Canaanites which dwelt in that hill, and smote them, and discomfited them, even unto Hormah.
1Appoluthu Sabaiyaar ellaarum kookkuralittup pulampinaarkal; janangal antu iraamuluthum aluthukonntirunthaarkal.And all the congregation lifted up their voice, and cried; and the people wept that night.
2Israel puththirar ellaarum Moseskkum aaronukkum virothamaaka muraுmuraுththaarkal. Sabaiyaar ellaarum avarkalai Nnokki: ekipthuthaesaththilae seththupponomaanaal nalamaayirukkum; intha vanaantharaththilae naangal seththaalum nalam.And all the children of Israel murmured against Moses and against Aaron: and the whole congregation said unto them, Would God that we had died in the land of Egypt! or would God we had died in this wilderness!
3Naangal pattayaththaal matiyumpatikkum, engal pennjaathikalum pillaikalaiyum kollaiyaakumpatikkum, Karththar engalai intha thaesaththukkuk konnduvanthathu enna? Ekipthukkuth thirumpippokirathae engalukku uththamam allavo entarkal.And wherefore hath the LORD brought us unto this land, to fall by the sword, that our wives and our children should be a prey? were it not better for us to return into Egypt?
4Pinpu avarkal: naam oru thalaivanai aerpaduththikkonndu ekipthukkuth thirumpippovom vaarungal entu oruvarotoruvar sollikkonndaarkal.And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.
5Appoluthu Mosesyum aaronum Israel puththirarin Sabaiyaaraakiya ellaak koottaththaarukku munpaakavum mukanguppura vilunthaarkal.Then Moses and Aaron fell on their faces before all the assembly of the congregation of the children of Israel.
6Thaesaththaich suttippaarththavarkalil noonin kumaaranaakiya yosuvaavum, eppunnaeyin kumaaranaakiya kaalaepum, thangal vasthirangalaik kiliththukkonndu,And Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of them that searched the land, rent their clothes:
7Israel puththirarin samastha Sabaiyaiyum Nnokki: naangal poych suttippaarththu sothiththa thaesam makaa nallathaesam.And they spake unto all the company of the children of Israel, saying, The land, which we passed through to search it, is an exceeding good land.
8Karththar nammael piriyamaayirunthaal, anthath thaesaththilae nammaik konndupoy, paalum thaenum odukira anthath thaesaththai namakkuk koduppaar.If the LORD delight in us, then he will bring us into this land, and give it us; a land which floweth with milk and honey.
9Karththarukku virothamaakamaaththiram kalakampapannnnaathirungal; antha thaesaththin janangalukku neengal payappadavaenntiyathillai; avarkal namakku iraiyaavaarkal; avarkalaik kaaththa nilal avarkalai vittu vilakippoyittaு; Karththar nammotae irukkiraar; avarkalukkup payappadavaenntiyathillai entarkal.Only rebel not ye against the LORD, neither fear ye the people of the land; for they are bread for us: their defense is departed from them, and the LORD is with us: fear them not.
10Appoluthu avarkalmael kalleriyavaenndum entu Sabaiyaar ellaarum sonnaarkal; udanae karththarutaiya makimai aasarippuk koodaaraththil Israel puththirar ellaarukkum munpaakak kaanappattathu.But all the congregation bade stone them with stones. And the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.
11Karththar Mosesyai Nnokki: ethuvaraikkum intha janangal enakkuk kopam unndaakkuvaarkal? Thangalukkullae naan kaattina sakala ataiyaalangalaiyum avarkal kanndum, ethuvaraikkum ennai visuvaasiyaathiruppaarkal?And the LORD said unto Moses, How long will this people provoke me? and how long will it be ere they believe me, for all the signs which I have showed among them?
12Naan avarkalaik kollai Nnoyinaal vaathiththu, suthantharaththukkup purampaakkippottu, avarkalaippaarkkilum unnaip perithum palaththathumaana jaathiyaakkuvaen entar.I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
13Moses karththarai Nnokki: ekipthiyar ithaik kaetpaarkal; avarkal naduvilirunthu ummutaiya vallamaiyinaalae intha janangalaik konnduvantheerae.And Moses said unto the LORD, Then the Egyptians shall hear it, (for thou broughtest up this people in thy might from among them;)
14Karththaraakiya neer intha janangalin naduvae irukkirathaiyum, karththaraakiya neer mukamukamaayth tharisanamaakirathaiyum, ummutaiya maekam ivarkalmael nirkirathaiyum, pakalil maekaththoonnilum, iravil akkiniththoonnilum, neer ivarkalukku mun sellukirathaiyum kaettirukkiraarkal, intha thaesaththin kutikalukkum solluvaarkal.And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
15Orae manithanaik kollukirathupola intha janangalaiyellaam neer kolveeraanaal, appoluthu ummutaiya geerththiyaik kaettirukkum purajaathiyaar:Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,
16Karththar antha janangalukkuk koduppom entu aannaiyittiruntha thaesaththilae avarkalaik konndupoy vidak koodaathaeponapatiyinaal, avarkalai vanaantharaththilae kontupottar enpaarkalae.Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.
17Aakaiyaal Karththar neetiya saanthamum mikuntha kirupaiyumullavar entum, akkiramaththaiyum meeraுthalaiyum mannikkiravarentum, kuttamullavarkalaik kuttamattavarkalaaka vidaamal, pithaakkal seytha akkiramaththaip pillaikalidaththil moontam naankaam thalaimuraimattum visaarikkiravar entum, neer solliyirukkirapatiyae,And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
18En aanndavarutaiya vallamai perithaay vilanguvathaaka.The LORD is long-suffering, and of great mercy, forgiving iniquity and transgression, and by no means clearing the guilty, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation.
19Umathu kirupaiyinutaiya makaththuvaththinpatiyaeyum, ekipthai vittathumuthal innaalvaraikkum intha janangalukku manniththuvanthathinpatiyaeyum, intha janangalin akkiramaththai manniththarulum entan.Pardon, I beseech thee, the iniquity of this people according unto the greatness of thy mercy, and as thou hast forgiven this people, from Egypt even until now.
20Appoluthu Karththar: un vaarththaiyinpatiyae manniththaen.And the LORD said, I have pardoned according to thy word:
21Poomiyellaam karththarutaiya makimaiyinaal nirainthirukkum entu ennutaiya jeevanaikkonndu sollukiraேn.But as truly as I live, all the earth shall be filled with the glory of the LORD.
22En makimaiyaiyum, naan ekipthilum vanaantharaththilum seytha en ataiyaalangalaiyum kanntirunthum, en saththaththukkuch sevikodaamal, ithanotae paththumurai ennaip pareetchaை paarththa manitharil oruvarum,Because all those men which have seen my glory, and my miracles, which I did in Egypt and in the wilderness, and have tempted me now these ten times, and have not hearkened to my voice;
23Avarkal pithaakkalukku naan aannaiyittukkoduththa thaesaththaik kaanamaattarkal; enakkuk kopam unndaakkinavarkalil oruvarum athaikkaanamaattarkal.Surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that provoked me see it:
24Ennutaiya thaasanaakiya kaalaep vaeraே aaviyai utaiyavanaayirukkirapatiyinaalum, uththamamaay ennaip pinpattivanthapatiyinaalum, avan poyvanthathaesaththilae avanaich serappannnuvaen; avan santhathiyaar athaich suthanthariththukkolluvaarkal.But my servant Caleb, because he had another spirit with him, and hath followed me fully, him will I bring into the land whereinto he went; and his seed shall possess it.
25Amalaekkiyarum kaanaaniyarum pallaththaakkilae kutiyirukkirapatiyinaal, naalaikku neengal thirumpi sivantha samuththiraththukkup pokira valiyaay vanaantharaththukkup pirayaanampannnungal entar.(Now the Amalekites and the Canaanites dwelt in the valley.) Tomorrow turn you, and get you into the wilderness by the way of the Red sea.
26Pinnum Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
27Enakku virothamaay muraுmuraுkkira inthap pollaatha Sabaiyaarai ethuvaraikkum poraுppaen? Israel puththirar enakku virothamaay muraுmuraுkkirathaik kaettaேn.How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.
28Nee avarkalotae sollavaenntiyathu ennavental: neengal en sevikal kaetkach sonnapirakaaram ungalukkuch seyvaen enpathai en jeevanaikkonndu sollukiraேn entu Karththar uraikkiraar.Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
29Intha vanaantharaththil ungal piraethangal vilum; ungalil irupathu vayathumuthal atharku maerpattavarkalaaka ennnappattu, ungal thokaikku utpattavarkalum enakku virothamaay muraுmuraுththirukkiravarkalumaakiya anaivarin piraethangalum vilum.Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward which have murmured against me.
30Eppunnaeyin kumaaran kaalaepum, noonin kumaaran yosuvaavum thavira, mattavarkalaakiya neengal naan ungalaik kutiyaettaுvaen entu aannaiyittukkoduththa thaesaththil piravaesippathillai.Doubtless ye shall not come into the land, concerning which I sware to make you dwell therein, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
31Kollaiyaavaarkal entu neengal sonna ungal kulanthaikalaiyo naan athil piravaesikkach seyvaen; neengal asattaைppannnnina thaesaththai avarkal kanndarivaarkal.But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.
32Ungal piraethangalo intha vanaantharaththilae vilum.But as for you, your carcasses, they shall fall in this wilderness.
33Avaikal vanaantharaththilae vilunthu theerumattum, ungal pillaikal naarpathuvarusham vanaantharaththilae thirinthu, neengal sorampona paathakaththaich sumappaarkal.And your children shall wander in the wilderness forty years, and bear your whoredoms, until your carcasses be wasted in the wilderness.
34Neengal thaesaththai suttippaarththa naarpathunaal ilakkaththinpatiyae, ovvoru naal ovvoru varushamaaka, neengal naarpathu varusham ungal akkiramangalaich sumanthu, en udanpatikkaikku vantha maaraுthalai unaruveerkal.After the number of the days in which ye searched the land, even forty days, each day for a year, shall ye bear your iniquities, even forty years, and ye shall know my breach of promise.
35Karththaraakiya naan ithaich sonnaen; enakku virothamaayk koottangaூtina inthap pollaatha Sabaiyaar yaavarukkum ippatiyae seyvaen; intha vanaantharaththilae alivaarkal, ingae saavaarkal entu sol entar.I the LORD have said, I will surely do it unto all this evil congregation, that are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.
36Antha thaesaththaich sothiththuppaarkkumpati Mosesyaal anuppappattuth thirumpi, antha thaesaththaikkuriththuth thurchcheythi konnduvanthu,And the men, which Moses sent to search the land, who returned, and made all the congregation to murmur against him, by bringing up a slander upon the land,
37Sabaiyaar ellaarum avanukku virothamaay muraுmuraுkkumpati anthath thurchcheythiyaich sonnavarkalaakiya antha manithar karththarutaiya sannithiyil vaathaiyinaal seththaarkal.Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.
38Thaesaththaich suttippaarkkappona antha manitharil noonin kumaaranaakiya yosuvaavum, eppunnaeyin kumaaranaakiya kaalaepummaaththiram uyirotirunthaarkal.But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.
39Moses intha vaarththaikalai Israel puththirar anaivarodum sonnapothu, janangal mikavum thukkiththaarkal.And Moses told these sayings unto all the children of Israel: and the people mourned greatly.
40Athikaalamae avarkal elunthirunthu: naangal paavanjaெythom, Karththar vaakkuththaththampannnnina idaththukku naangal povom entu solli malaiyin uchchiyil aeraththunninthaarkal.And they rose up early in the morning, and gat them up into the top of the mountain, saying, Lo, we be here, and will go up unto the place which the LORD hath promised: for we have sinned.
41Moses avarkalai Nnokki: neengal ippati karththarin kattalaiyai meeraுkirathenna? Athu ungalukku vaaykkaathu.And Moses said, Wherefore now do ye transgress the commandment of the LORD? but it shall not prosper.
42Neengal ungal saththurukkalukku munpaaka muriya atikkappadaathapatikku aerippokaathirungal; Karththar ungal naduvil iraar.Go not up, for the LORD is not among you; that ye be not smitten before your enemies.
43Amalaekkiyarum kaanaaniyarum angae ungalukkumunnae irukkiraarkal; pattayaththinaal viluveerkal; neengal karththarai vittup pinvaanginapatiyaal, Karththar ungalotae irukkamaattar entan.For the Amalekites and the Canaanites are there before you, and ye shall fall by the sword: because ye are turned away from the LORD, therefore the LORD will not be with you.
44Aanaalum avarkal malaiyin uchchiyil aerath thunninthaarkal; karththarutaiya udanpatikkaiyin pettiyum Mosesyum paalayaththai vittup pokavillai.But they presumed to go up unto the hill top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.
45Appoluthu amalaekkiyarum kaanaaniyarum antha malaiyilae irunthu irangivanthu, avarkalai muriya atiththu, avarkalai ormaamattum thuraththinaarkal.Then the Amalekites came down, and the Canaanites which dwelt in that hill, and smote them, and discomfited them, even unto Hormah.