தானியேல் 10

fullscreen1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.

fullscreen2 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.

fullscreen3 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை. நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

fullscreen4 முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,

fullscreen5 என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.

fullscreen6 அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

fullscreen7 தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

fullscreen8 நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

fullscreen9 அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.

fullscreen10 இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

fullscreen11 அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

fullscreen12 அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

fullscreen13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தாரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.

fullscreen14 இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

fullscreen15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

fullscreen16 அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

fullscreen17 ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.

fullscreen18 அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,

fullscreen19 பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

fullscreen20 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

fullscreen21 சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.

Tamil Indian Revised Version
தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

Tamil Easy Reading Version
ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான்.

Thiru Viviliam
குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.

Title
யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்

Luke 3:18Luke 3Luke 3:20

King James Version (KJV)
But Herod the tetrarch, being reproved by him for Herodias his brother Philip’s wife, and for all the evils which Herod had done,

American Standard Version (ASV)
but Herod the tetrarch, being reproved by him for Herodias his brother’s wife, and for all the evil things which Herod had done,

Bible in Basic English (BBE)
But Herod the king, because John had made a protest on account of Herodias, his brother’s wife, and other evil things which Herod had done,

Darby English Bible (DBY)
But Herod the tetrarch, being reproved by him as to Herodias, the wife of his brother, and as to all the wicked things which Herod had done,

World English Bible (WEB)
but Herod the tetrarch, being reproved by him for Herodias, his brother’s{TR reads “brother Philip’s instead of brother’s”} wife, and for all the evil things which Herod had done,

Young’s Literal Translation (YLT)
and Herod the tetrarch, being reproved by him concerning Herodias the wife of Philip his brother, and concerning all the evils that Herod did,

லூக்கா Luke 3:19
காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
But Herod the tetrarch, being reproved by him for Herodias his brother Philip's wife, and for all the evils which Herod had done,


hooh
But
δὲdethay
Herod
Ἡρῴδηςhērōdēsay-ROH-thase
the
hooh
tetrarch,
τετράρχης,tetrarchēstay-TRAHR-hase
reproved
being
ἐλεγχόμενοςelenchomenosay-layng-HOH-may-nose
by
ὑπ'hypyoop
him
αὐτοῦautouaf-TOO
for
περὶperipay-REE
Herodias
Ἡρῳδιάδοςhērōdiadosay-roh-thee-AH-those
his
τῆςtēstase

γυναικὸςgynaikosgyoo-nay-KOSE
brother
φιλίππουphilippoufeel-EEP-poo
Philip's
τοῦtoutoo

ἀδελφοῦadelphouah-thale-FOO
wife,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
for
περὶperipay-REE
all
πάντωνpantōnPAHN-tone
evils
the
ὧνhōnone
which
ἐποίησενepoiēsenay-POO-ay-sane

πονηρῶνponērōnpoh-nay-RONE
Herod
hooh
had
done,
Ἡρῴδηςhērōdēsay-ROH-thase